மாணவர்களுக்கு உதவும் மொபைல் ஆப் வெளியீடு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

மாணவர்களுக்கு உதவும் மொபைல் ஆப் வெளியீடு

பிரதமர் நரேந்திர மோடி தலைமை யிலான மத்திய அரசின் கனவுத் திட்டங்களில் ஒன்றான, 'டிஜிட்டல் இந்தியா'வை, நனவாக்கும் வகையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை, மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு பயன்படும், 'மொபைல் ஆப்'களை நேற்று அறிமுகப்படுத்தியது.



டில்லி, விஞ்ஞான் பவனில் நேற்று, சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கான, 'சாரன்ஷ்' மென்பொருளை, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை வெளியிட்டது; இது, குழந்தைகளின் கல்வி அறிவு மேம்பாட்டை, பாடவாரியாக, தேசிய, மாநில, மாவட்ட அளவில் பிற குழந்தைகளுடன் ஒப்பீடு செய்ய, பெற்றோருக்கு உதவி செய்யும். தவிர, மாணவர்கள், இணையதளத்தில் இருந்து பாடங்களை பெற உதவும், எண்ணற்ற, 'மொபைல்' செயலிகள், இணையதளம் சார்ந்த இயங்கு தளங்கள் வெளியிடப்பட்டன. நிகழ்ச்சியில் பங்கேற்ற, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, ஸ்மிருதி இரானி பேசியதாவது: பள்ளிக் கல்வியில் வெளிப்படைத் தன்மையையும், புதிதாக கற்கும் வாய்ப்புகளையும், குழந்தைகளுக்கு ஏற்படுத்தித் தருவதில், மனிதவள மேம்பாட்டுத் துறை ஆர்வமாக உள்ளது. மாணவர்களின் தேர்வுச் சுமைகளை குறைக்க, மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து, புதிய திட்டங்கள் தீட்டி வருகிறோம். வரும் ஆண்டில், இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும். மாநில அரசு களின் உதவியால், அனைத்து பள்ளிகளிலும், மாணவியருக்கு கழிப்பறை அமைத்து தரும் திட்டம், நனவாகி வருகிறது. இவ்வாறு ஸ்மிருதி இரானி கூறினார்.

No comments:

Post a Comment

Please Comment