தமிழகம் பள்ளிக்குச் செல்லும் மாணவிகள் தங்கள் பிரச்சனைகளை தெரிவிக்க இலவச எண் அறிமுகம்: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்
ஈரோடு: இந்தியாவிலேயே முதன்முறையாக பள்ளிக்குச் செல்லும் மாணவிகள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்த புகார்களை தெரிவிக்க 14417 என்ற இலவச எண்
அறிமுகப்படுத்துள்ளதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார்.
ஈரோடு மாவட்டம், நாகதேவன்பாளையத்தில் 2 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பாலம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜையில் கலந்துக்கொண்டார்.
அதற்கு பின்னர் 14417 என்ற எண் மூலம் கொடுக்கப்படும் புகார்கள் மீது 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், புகார் தெரிவிக்கும் மாணவிகளின் விவரங்கள் பாதுகாக்கப்படும் என்றும் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
No comments:
Post a Comment
Please Comment