அஸ்ஸாமை போல் அனைத்து மாநிலங்களிலும் தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பங்களாதேஷில் இருந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காணும் வகையில் அஸ்ஸாமில் தேசிய குடிமக்கள் பதிவு பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதன் இறுதி வரைவு அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. மொத்தம் உள்ள 3,29,91,384 விண்ணப்பதாரர்களில் 2,89,83,677 பேர் குடிமக்களின் தேசிய பதிவேட்டில் சேர்க்கப்பட்டுள்ளனர். 40 லட்சம் பேர் பதிவேட்டில் சேர்க்கப்படவில்லை. விடுபட்டவர்கள் தங்கள் பெயர்களை சேர்க்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
40 லட்சம் பேர் விடுபட்டது தொடர்பாக சர்ச்சை எழுந்தது. எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தன. இதை தொடர்ந்து அஸ்ஸாமை போல் அனைத்து மாநிலங்களிலும் தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் பரிசீலனை செய்து வருகிறது என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
Please Comment