நீட்' தேர்வில் மீண்டும் மாற்றம்? - ThulirKalvi Blogs

Latest

Search This Site

நீட்' தேர்வில் மீண்டும் மாற்றம்?

நீட்' தேர்வில் மீண்டும் மாற்றம்?








மருத்துவப் படிப்புகளுக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வை, ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தும் முடிவை, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் மறு பரிசீலனை செய்வதாக தகவல் வெளியாகிஉள்ளது
இது குறித்து, மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது





எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வான, நீட், சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் சார்பில் நடத்தப்பட்டது. இந்நிலையில், தேசிய அளவிலான நுழைவுத்தேர்வுகளை நடத்த, 'நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி' எனப்படும் புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது
இந்த அமைப்பின் சார்பில், நீட் தேர்வுகள், இனி, ஆண்டுக்கு இரு முறை நடத்தப்படும்' என,மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர்அறிவித்திருந்தார்




இதன் மூலம், கிராமப்புற மாணவர்கள் பெருமளவு பாதிக்கப்படுவர்' என, மத்திய சுகாதார அமைச்சகத்தின் சார்பில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்நிலையில் ஆண்டுக்கு இரு முறை தேர்வுகளைநடத்தினால் அது மாணவர்களுக்கு கூடுதல் மனஅழுத்தத்தை ஏற்படுத்தும்



இந்த தேர்வுகளை, கணினி முறையில் நடத்துவதன் இதையடுத்து, நீட் தேர்வை, ஆண்டுக்கு இரு முறை நடத்துவது குறித்த முடிவை, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம், மறு பரிசீலனைt செய்யும் நிலையில் உள்ளது. எனினும், இது குறித்த இறுதி முடிவு விரைவில் வெளியாகும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

No comments:

Post a Comment

Please Comment