அந்நியர்களுடன் உங்களை இணைப்பதற்கு பேஸ்புக் இன் புதிய முயற்சி.! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

அந்நியர்களுடன் உங்களை இணைப்பதற்கு பேஸ்புக் இன் புதிய முயற்சி.!

உங்கள் வாழ்க்கையில் புதிய மனிதர்களின் நட்பை எதிர்பார்த்துக் காத்திருப்பவரா நீங்கள்? அப்ப இந்தப் பதிவு உங்களுக்கானது தான். I



உங்கள் வாழ்க்கையில் புதிய மனிதர்களின் நட்பை எதிர்பார்த்துக் காத்திருப்பவரா நீங்கள்? அப்ப இந்தப் பதிவு உங்களுக்கானது தான். உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் மட்டுமே பழகி வெளி உலகத்தில் உள்ள புதிய மனிதர்களைச் சந்திக்க வாய்ப்புக் கிடைக்காமல் போனவர்களுக்கு, அதைச் சரியாக செய்ய முடியாமல் தவித்த இளைஞர்களுக்கு பேஸ்புக் புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டு வருகிறது.



புதிய மனிதர்களுடன் உங்கள் நட்பு வட்டத்தை விரிவுபடுத்திக் கொள்ள பேஸ்புக் இந்த புதிய முயற்சியைச் சோதனை செய்துகொண்டிருக்கிறது. உங்கள் நண்பர்களின் பதிவுகள் அல்லது படங்களைப் பற்றி கருத்துத் தெரிவிக்கும் நபர்களுடன், உங்களை இணைக்கும் வசதியை இந்த புதிய சேவை வழங்குமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக இணைக்கும் விஷயங்கள்



உதாரணமாக, நீங்கள் இணைக்கப்படாதவர்களுடன் பொதுவாக இணைக்கும் விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு நீங்கள் அவர்களுடன் பழகுவதற்கான வசதியை இந்த புதிய சேவை வழங்கும் என்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பேஸ்புக் குழு


உங்களின் புதிய நண்பர் நீங்கள் இருக்கும் பொது பேஸ்புக் குழுவில் இருப்பவராகவோ, அல்லது நீங்கள் ஒரே கல்லூரிக்கு சென்றிருந்தால், அல்லது அதே நிறுவனத்துக்காக வேலை செய்பவர் என்றால் - அந்த நபரின் பெயருடன் அவருடைய விவரங்களை உங்களுக்கு தெரிவிக்கப்படும்.
விசிபிள் மோடு



நீங்கள் பார்க்கும் நபரின் பெயர் மற்றும் அவருடன் உங்களுக்குப் பொதுவா இருக்கும் குழுவின் விவரங்கள் மட்டுமே தெரிவிக்கப்படும். அந்த நபரின் விபரங்கள் விசிபிள் மோடில் இருந்தால் மட்டுமே அந்த நண்பரின் நண்பராக இருக்கும் பட்சத்தில் முழு விவரங்களை உங்களால் காண முடியும்.
"திங்ஸ் இன் காமன்"



பொதுவாகப் பகிரப்பட்ட விஷயங்களைக் கொண்டு புதிய மக்களைத் தெரிந்துகொண்டு இணைக்க இந்த சேவை உதவுகிறது, "திங்ஸ் இன் காமன்" என்ற லேபிள் உங்களுடன் பொதுவான இணைப்பு குழுவின் நபர்களை உங்களுக்குத் தனித்து காட்டும் படி இந்த புதிய சேவை உருவாக்கப்பட்டுள்ளதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Please Comment