சிறுவர்கள் செல்போனில் மோமோ சவால் விளையாட்டை விளையாடுகிறார்களா என பெற்றோர்கள் கவனமுடன் இருக்கவேண்டும் மத்திய அரசு எச்சரித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ப்ளுவேல் எனப்படும் விளையாட்டு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த விளையாட்டில்t ஈடுபடும் சிறுவர்கள், இளைஞர்கள் என அனைத்து வயதினரும் ஒரு கட்டத்தில் தற்கொலை செய்து கொள்ள வைத்தது இந்த விளையாட்டு. இதன் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பலர் காரணமே இன்றி தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தனர். படிப்படியாக மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வு நடவடிக்கைகளை தொடர்ந்து செல்போன் அடிமைகள் அதில் இருந்து விடுபட்டு வெளியே வந்தனர்.
தற்போது 'மோமோ சவால்' என்ற பெயரில் உயிரை பலிவாங்கும் மற்றொரு செல்போன் விளையாட்டு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
விளையாட்டிற்கான விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றால் ஆபத்தான படங்கள், ஆடியோ, வீடியோக்களை மூலமாக நம்மை அச்சுறுத்த தொடங்கும். இந்த விளையாட்டின் காரணமாக நாட்டில் ஒரு சில இடங்களில் சில தற்கொலை சம்பவங்கள் நிகழந்ததாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகள், மோமோ சவால் விளையாட்டில் ஈடுபடுகிறார்களா என்பது குறித்து பெற்றோர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என தகவல்t தொழில்நுட்ப துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மோமோ சவால் விளையாட்டானது மிகவும் ஆபத்துக்களை விளைவிப்பதாக உள்ளது.
தொடர்ந்து விளையாடும் பட்சத்தில் தற்கொலை செய்துகொள்வதற்கான சவாலில் அது முடிகின்றது. வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் இந்த விளையாட்டு பரவி வருகின்றது. வீட்டில் இருக்கும் குழந்தைகளிடம் வழக்கத்திற்கு மாறான மாற்றங்களான தனிமை, பிறரிடம் இருந்து விலகுதல், அதிகப்படியான கோபம், வழக்கமான நடவடிக்கைகளில் ஆர்வமின்மை போன்றவை தென்படுகின்றதா என பெற்றோர்கள் கண்காணிப்பது அவசியம். கைகள், உடல்களில் புதிய தழும்புகள், வெட்டுக்காயங்கள் உள்ளதா என பாருங்கள்.
இவை எல்லாம் உங்களுக்கான எச்சரிக்கையாகும். வீட்டில் உள்ள குழந்தைகள் மீது அதிக கவனம் செலுத்துங்கள். அதிக நேரம் செல்போனில் மூழ்கி இருந்தால் மோமோ சவாலிற்கு அடிமையாகி உள்ளார்களா என சோதனை செய்யுங்கள். மோமோ விளையாடுவது தெரியவந்தால் ஆரம்பித்திலேயே அதனை களைந்து அதில் இருந்து பாதிக்கப்பட்ட குழந்தையை வெளியே கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை துரிதமாக செய்யுங்கள். தற்கொலைக்கு தூண்டும் மோமோ சவாலுக்கு அடிமையாகாமல் குழந்தைகளை பாதுகாத்து ெகாள்ளுங்கள். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
Please Comment