அரசுப் பள்ளிகளுக்கு உதவுங்கள்" அமைச்சர் செங்கோட்டையன் அழைப்பு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

அரசுப் பள்ளிகளுக்கு உதவுங்கள்" அமைச்சர் செங்கோட்டையன் அழைப்பு

அரசுப் பள்ளிகளை மேம்படுத்த உதவ முன்வருமாறு முன்னாள் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் அழைப்பு விடுத்துள்ளார்.
அரசுப்பள்ளிகளில் படித்து உன்னத நிலை அடைந்துள்ள மாணவர்கள், அரசுப்பள்ளிகளுக்கு உதவ பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோரிக்கை விடுத்துள்ளார்.




அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு எவ்வளவுதான் நிதி ஒதுக்கினாலும் இது என் பள்ளி என்ற எண்ணத்தை இதயத்தில் ஏந்திய நல்லோரின் துணை, அனைத்து அரசுப்பள்ளிகளையும் மேலும் மெருகூட்டிட வழிவகை செய்திடும் என செங்கோட்டையன் கூறியுள்ளார்.


பள்ளிகளின் உட்கட்டமைப்பு, சுற்றுச்சுவர், வர்ணம் பூசுதல், இணைய வசதிகள், சுகாதாரமான கழிவறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள் போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்த முன்வர அழைப்பு விடுத்துள்ளார். தாமாக முன்வருபவர்களுக்கு எவ்வித தாமதமுமின்றி உடனடியாக அனுமதி வழங்க வேண்டுமென்று நிர்வாக அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அன்பு உள்ளமும், தர்ம சிந்தனையும் கொண்ட அனைவரும் தாங்கள் விரும்பும் அரசுப்பள்ளிகளுக்கு உதவிட முன்வருமாறு செங்கோட்டையன் அழைப்புவிடுத்துள்ளார்.

No comments:

Post a Comment

Please Comment