சூரியனுக்கு மிக அருகில் சென்று சூரிய புயல் மற்றும் அதன் பருவநிலை மாற்றங்கள் குறித்த தகவல்களை சேகரிக்க பார்க்கர் சோலார் புரோப் என்ற செயற்கைகோளை நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் விண்ணில் செலுத்தியது.
இதுவரை எந்தவித செயற்கை கோளும் சூரியனுக்கு அருகில் சென்று ஆராய்ச்சியை மேற்கொள்ளாத நிலையில் முதல்முறையாக இந்த செயற்கைகோள் ஏவப்பட்டது.
சூரிய மண்டலத்திற்கு சென்று அதன் கதிர்வீச்சுக்களையும், வெப்பத்தையும் தாங்கும் வகையில் இந்த பார்க்கர் சோலார் புரோப் செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக நாசா ஆராய்ச்சி மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது சூரிய பரப்பில் 64 லட்சம் கி.மீ. தொலைவிற்கு சென்று வட்டமிடக்கூடியது. சுமார் 1,400 செல்சியஸ் (2,500 பாரன்ஹீட்) வெப்பம் மற்றும் சூரிய கதிர் வீச்சுக்களை தாங்கி அதன் தகவல்களை சேகரிக்க வல்லது. இந்த செயற்கைக்கோள் சூரியனின் வெப்பம் மிகுந்த கரோனா பகுதியில் பயணித்து ஆய்வு செய்ய கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
எந்தஒரு செயற்கைகோளும் சூரியனுக்கு அருகில் சென்றிராத நிலையில், அதன் அதீத வெப்பத்தை தாங்கும் வகையில் 11.4 செ.மீ தடிமனிற்கு கார்பன் காம்போசிட்டால் பார்க்கர் சோலார் புரோப் செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்கைக்கோள் மணிக்கு 7 லட்சத்து 25ஆயிரம் கி.மீ வேகத்திற்கு பயணிக்க கூடியது என நாசா தெரிவித்துள்ளது. இது சூரிய மண்டலத்தை முழுவதுமாக சுற்றி 6 வருடங்கள் 11 மாதங்கள் வரை சுற்றி வந்து ஆய்வு செய்ய வல்லது என நாசா குறிப்பிட்டுள்ளது.

No comments:
Post a Comment
Please Comment