வெள்ளப்பெருக்கில் இருந்து கார்களை பாதுகாக்க புதிய கண்டுபிடிப்பு..! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

வெள்ளப்பெருக்கில் இருந்து கார்களை பாதுகாக்க புதிய கண்டுபிடிப்பு..!

கார்களை வெள்ள பாதிப்பில் இருந்து பாதுகாக்க பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் கார்களுக்கான வெள்ளக் பாதுகாப்பு கவசப் பை ஒன்றை உருவாக்கியுள்ளார்.


திடீரென ஏற்படும் வெள்ளப்பெருக்கு காரணமாக கார்கள் வெள்ளத்தில் இழுத்து செல்லப்படுகிறது. இதனால் வெள்ளத்தில் இருந்து கார்களை பாதுகாப்பதற்காக பிளாஸ்டிக் மூல்ப்பொருளாள் ஆன பிரமாண்ட பை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பைக்குள் காரை செலுத்தி ஜிப் மூலம் மூடுவது எளிமையானது. இந்தப் பையுடன் இணைந்தவாறு கயிறு அமைப்பும் கொடுக்கப்பட்டுள்ளதால் கார் வெள்ளத்தில் அடித்துச் செல்லாத வகையில் பாதுகாப்பான இடத்தில கட்டி வைக்க முடியும். பெரிய மற்றும் சிறிய வகை கார்களுக்கு பொருந்தும் வகையில் இந்தப் பைகள் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதன் விலைதான் சற்று யோசிக்க வைக்கிறது. இந்த பிரமாண்ட பை இந்திய மதிப்பில் சுமார் 40 ஆயிரம் ரூபாயாம். எனினும் காருடன் ஒப்பிடுகையில் இதன் விலை பெரிதாக கருதப்படாது என்று உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment

Please Comment