மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ”ககன்யான்” - ThulirKalvi Blogs

Latest

Search This Site

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ”ககன்யான்”

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ”ககன்யான்” திட்டத்திற்கான தலைவராக வி.ஆர்.லலிதாம்பிகாவை இஸ்ரோ தேர்வு!













புதுடெல்லி,
விண்வெளி ஆய்வில் பல மைல்கல் திட்டங்களை நிறைவேற்றி வரும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ), விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. ‘ககன்யான்’ என பெயரிடப்பட்டு உள்ள இந்த திட்டம் 2022-ம் ஆண்டுக்குள் செயல்படுத்தப்படும் என டெல்லியில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில்  பிரதமர் மோடி கூறினார்.
இந்தநிலையில் 2022-ம் ஆண்டிற்குள் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கான பணிகளில் இஸ்ரோ ஈடுபட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கான தலைவராக 30 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவரான வி.ஆர்.லலிதாம்பிகாவை இஸ்ரோ தலைவர் கே.சிவன் தேர்வு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இணை இயக்குனராக இருந்தவர் லலிதாம்பிகா என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Please Comment