குறைந்த காலமே பிரதமர் பதவியை வகித்தாலும் நிறைவான பணியினை செய்தவர் வாஜ்பாய்.
அணு ஆயுத நாடாக இந்தியாவின் பெயரை உலகையே உச்சரிக்க செய்தவரும், 40 ஆண்டு அரசியல் அனுபவத்தை பெற்றவருமான வாஜ்பாயின் மனம் பலர் அறியாதது. குறிப்பாக தலைவர்களுடனான நட்பு, அதிலும் தமிழக தலைவர்களுடனான நட்பு அரசியல் கடந்து பிரகாசித்தது. இது நாடு முழுக்க உள்ள தலைவர்கள் ஏற்றுக் கொண்ட உண்மை.
அதில் முக்கியமானவர் அறிஞர் அண்ணா. இருவரும் மிக நெருங்கிய நண்பர்கள். வாஜ்பாய் ஹிந்தியில் பேசினால் அண்ணா மிகவும் ரசித்து கேட்பாராம். 1965-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஒரு விவாதத்தில், அண்ணா சொல்கிறார், "என் நண்பனின் மொழியின் இனிமையை நான் பலமுறை உணர்ந்திருக்கிறேன்" என்று சொன்னார்.

அதேபோல, வாஜ்பாய்-க்கு கவிதைகள் எழுதும் ஆர்வம் அதிகம் உள்ளது என்று தெரியும். ஒருமுறை வாஜ்பாய் கவிதை தொகுப்பு ஒன்றினை வெளியிட்டார். அதனை தமிழில் மொழிபெயர்ப்பு செய்யும்போது, "எனது ஆரூயிர் நண்பரும், மதிப்பிற்குரியவருமான அண்ணாவின் நினைவாக" என்று சொல்லியே தனது கவிதை தொகுப்பினை அர்ப்பணித்தார். அந்த அளவுக்கு இருவருக்குள்ளும் அன்பு மற்றும் இலக்கிய ரீதியான நட்பு நிலவியது.




தமிழக தலைவர்களுடன் வாஜ்பாயின் நட்பு கனிந்து இனித்தது. அதனால்தானோ என்னவோ, ஈழத்தமிழர் பிரச்சனையாகட்டும், சேது சமுத்திர கால்வாய் திட்டமாகட்டும் வாஜ்பாய் மிக சாதுர்யமாகவும், நயமாகவும் அவ்விவகாரங்களை கையாண்டார். இந்திய அரசியலில் வாஜ்பாய் பதித்த அழுத்தமான கால்தடம் என்றுமே மாறாது.. மறையாது...மங்காது.
No comments:
Post a Comment
Please Comment