திருவண்ணாமலை மாவட்டத்தில் நேர்காணலுக்கு வராத ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு ஆகஸ்ட் மாதம் முதல் ஓய்வூதியம் நிறுத்தம் செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாவட்டக் கருவூலம், சார் அலுவலங்கள் மூலம் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள், ஆசிரியர் ஓய்வூதியர்கள் என அனைவருக்கும் 2018 - 2019ஆவது ஆண்டுக்குரிய நேர்காணல் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை நடைபெற்றது.
இந்த நேர்காணலுக்கு 99 சதவீதம் பேர் வந்திருந்தனர். நேர்காணலுக்கு வராத ஒரு சதவீத ஓய்வூதியர்களுக்கு அவர்களது செல்லிடப்பேசி எண்ணுக்கு குறுந்தகவலாகவும், பதிவுத் தபால் மூலமாகவும் நேர்காணலுக்கு வருமாறும், தவறும்பட்சத்தில் ஆகஸ்ட் மாதம் முதல் ஓய்வூதியம் நிறுத்தம் செய்யப்படும் என்றும் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது.
No comments:
Post a Comment
Please Comment