தனியார் நிறுவனம் தயாரித்த முதல் ராக்கெட்டை விண்ணில் ஏவியது சீனா - ThulirKalvi Blogs

Latest

Search This Site

தனியார் நிறுவனம் தயாரித்த முதல் ராக்கெட்டை விண்ணில் ஏவியது சீனா

வர்த்தக ரீதியில் தனியார் நிறுவனம் மேம்படுத்திய முதல் ராக்கெட்டை சீனா விண்ணில் ஏவியுள்ளது. ZQ-1 என பெயரிடப்பட்டுள்ள ராக்கெட்டை பெய்ஜிங்கை சேர்ந்த தனியார் நிறுவனம் மேம்படுத்தியுள்ளது. வடமேற்கு சீனாவில் உள்ள ஜீகுவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து வர்த்தக பயன்பாட்டிற்கான சிறிய ரக செயற்கைகோளுடன் இந்த ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. 19 மீட்டர் உயரமும், 1.35 மீட்டர் விட்டமும் கொண்ட இந்த ராக்கெட்டின் மொத்த எடை 45 டன்களாகும்.

நவீன தொழில்நுட்பத்துடனும், விரைந்து பறக்கும் திறனுடனும் குறைந்த செலவில் இந்த ராக்கெட் தயாரிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த ராக்கெட் சுமந்து சென்ற செயற்கைகோள் மூலமாக மத்திய சீனாவில் உள்ள தொலைக்காட்சி நிலையங்களுக்கு ரிமோட் சென்சார் வசதிகளை வழங்க முடியும். விண்வெளி அறிவியலில் ஆய்வு நடத்தவும் இந்த செயற்கைகோள் பயன்படும். தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு இந்த செயற்கைகோள் அதன் வட்டப்பாதைகளில் சுற்றிவரும் என்று சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

No comments:

Post a Comment

Please Comment