தற்கொலை உணர்வை துாண்டும், 'மோமோ சேலஞ்ச்' விளையாட்டில் இருந்து, பிள்ளைகளை மீட்பது குறித்து, பெற்றோருக்கு, மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகம், ஆலோசனைகள் வழங்கி உள்ளது.இணையதளத்தில், 'புளூ வேல்' எனும் விளையாட்டு,
சமீபத்தில் பிரபலமானது. இந்த விளையாட்டில் ஈடுபட்ட பலர், தற்கொலை செய்து, உயிரிழந்தனர்.இதைப்போலவே, மோமோ சேலஞ்ச் எனப்படும் விளையாட்டு, சிறுவர்கள் மத்தியில், சமீபத்தில் பிரபலமடைய துவங்கி உள்ளது.'பேஸ்புக்' மற்றும் 'வாட்ஸ் ஆப்' மூலம் விளையாடப்படும் இதில், சிறுவர் - சிறுமியருக்கு, சில சவால்கள் வழங்கப்படுகின்றன.
அதை செய்ய தவறினால், அவர்களை மிரட்டும், 'வீடியோ' மற்றும் புகைப்படங்கள், அவர்களது மொபைல் போனுக்கு அனுப்பப்படுகிறது. தொலைபேசி வாயிலாகவும் மிரட்டல்கள் விடுக்கப்படுகின்றன. உச்சகட்டமாக, சிறுவர்கள் தற்கொலைக்கு துாண்டப்படுகின்றனர்.
இந்தியா உட்பட, உலகம் முழுவதிலும் இருந்து, இந்த விளையாட்டை விளையாடிய சிறுவர்கள் பலர், தற்கொலை செய்தனர்.ஜப்பான், மெக்சிகோ மற்றும் கொலம்பியாi ஆகிய நாடுகளில் இருந்து, இந்த விளையாட்டுக்கான கட்டளைகள் பிறப்பிக்கப்படுகின்றன.
இந்த மோமோ சேலஞ்ச் விளையாட்டில் இருந்து, குழந்தைகளை மீட்பது குறித்து, பெற்றோருக்கு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகம் சில ஆலோசனைகளை வழங்கி உள்ளது.அதன் விபரம்:*
இணையத்தை பயன்படுத்தும் குழந்தைகள், எதில் அதிக நேரம் செலவிடுகின்றனர் என்பதை கண்காணிக்கவும்*
அவர்களது நடவடிக்கைகள் ரகசியமாக உள்ளதா என்பதையும், இணையத்தில் அதிக நேரம் செலவழிக்கின்றனரா என்பதையும் கவனிக்கவும்*
உங்களை பார்த்ததும், திரையில் உள்ளதை உடனே மாற்றுகின்றனரா என, கண்காணியுங்கள்* இணைய பயன்பாட்டுக்கு பின், வழக்கத்துக்கு மாறாக அதிக கோபத்தை வெளிப்படுத்துகின்றனரா என்பதை பாருங்கள்*
நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து விலகிச் சென்று, தனிமையில் நேரத்தை செலவிட அனுமதிக்கi வேண்டாம்* அவர்களது மொபைல் போன்களில், புதிய தொலைபேசி எண்கள் அல்லது இ - மெயில் முகவரி உள்ளதா என, சோதிக்கவும்* குழந்தைகள் பயன்படுத்தும் கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் போனில், கண்காணிப்பு மென்பொருள் தரவிறக்கம் செய்து, அவர்களின் செயல்பாடுகளை கண்காணிக்கவும்*
அவர்களது உடம்பில், அடிக்கடி காயங்களோ, வெட்டு தழும்புகளோ ஏற்பட்டால், உடனே கவனியுங்கள்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது

No comments:
Post a Comment
Please Comment