பல் மருத்துவத்தில் 618 இடம் காலி புதிதாக விண்ணப்பிக்க அழைப்பு
சென்னை, &'தனியார் பல் மருத்துவ கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டில், 618 இடங்கள் நிரம்பாமல் உள்ளன. நீட் தேர்வில் வெற்றி பெற்றோர், இந்த இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்&' என, மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, எம்.பி.பி.எஸ்., இடங்கள் அனைத்தும், இறுதி கட்ட கவுன்சிலிங்கில் நிரம்பின. பல் மருத்துவம் எனப்படும், பி.டி.எஸ்., படிப்பில், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான, 2ம் கட்ட கவுன்சிலிங், ஆக., 29ல் நிறைவடைந்தது.
இதில், 618 இடங்கள் காலியாக உள்ளன.இதுவரை பல் மருத்துவம் படிக்க விண்ணப்பிக்காதவர்கள், காலியாக உள்ள இந்த இடங்களுக்கு, புதிதாக விண்ணப்பிக்கலாம் என, மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment
Please Comment