Education - ThulirKalvi Blogs

Latest

Search This Site

Education


புதிய பாடத்திட்டத்தால் நான்கு ஆண்டுகளில் பலன்: கல்வி செயலர் தகவல்


புதிய பாடத்திட்டத்தால் நான்கு ஆண்டுகளில் பலன் கிடைக்கும். அப்போது தமிழக மாணவர்களின் சாதனை வெளிப்படும்," என பள்ளி கல்வி பாடத்திட்டம் செயலாளர் உதயசந்திரன் தெரிவித்தார்.மதுரையில் நடந்த புதிய பாடத்திட்டம் குறித்து ஆசிரியர்களிடம் கருத்து கேட்பு கூட்டத்தில் அவர் பேசியதாவது:


மூன்று ஆண்டுகளில் தயாரிக்க வேண்டிய பாடத்திட்டம் ஒன்பது மாதங்கள் உருவாக்கப்பட்டது. அது குறை பிரசவமாக இருந்துவிடக்கூடாது என்பதற்காக தற்போது குறைகள், விமர்சனம் குறித்து கருத்து கேட்டு ஆரோக்கிய குழந்தையாக தவழ நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ் சமூகம் அடுத்த தலைமுறையை எப்படி செதுக்க வேண்டும் என்ற பல விஷயங்கள் இடம் பெற்றுள்ளன.


அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டபோது நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட எதிர்வாதம் தொடர்பான விஷயம் 7ம் வகுப்பு &'ஏறு தழுவல்&' பாடத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. சேலத்தில் மாடு முட்டி இறந்த வீரர் நினைவாக உள்ள நடுகல், பிரான்சில் காளைகள் துன்புறுத்தப்படுவது, அலங்காநல்லுாரில் நம் வீரர்கள் அன்பாக காளையை தழுவுவதை ஒப்பிடும் புகைப்படம், எழுத்தாளர்கள் சுஜாதா, தி.ஜானகிராமன், நா.முத்துக்குமார் மகனுக்கு எழுதிய கடிதம் வரை புத்தகத்தில் பல விஷயங்கள் இடம் பெற்றுள்ளன.


பிளஸ் 1 தமிழில் அதிக அறிவியல் கதைகள் உள்ளன. தென் தமிழகத்தில் கடவுளாக பார்க்கப்படும் பென்னி குவிக், தமிழக கலாசாரம், பண்பாடு, வரலாறு சார்ந்த மற்றும் அன்றாட நிகழ்வுகளை தொடர்புபடுத்தி புதிய பாடத் திட்டம் உருவாக்கப்பட்டது.


நீட் தேர்வில் இடம் பெறும் 99 சதவீதம் வினாக்களுக்கு இதில் விடைகள் கிடைக்கும். வீடியோ பாடப் புத்தகங்கள் விரைவில் வெளியிடப்படும். நான்கு ஆண்டுகளில் மருத்துவம் உட்பட அகில இந்திய ஒதுக்கீட்டு பிரிவுகளை தமிழக மாணவர்களும் வென்று சாதிப்பார்கள் என்றார்.

இணை இயக்குனர் பொன்குமார் முன்னிலை வகித்தார். முதன்மை கல்வி அலுவலர் கோபிதாஸ் வரவேற்றார். மாவட்ட கல்வி அலுவலர்கள் அமுதா, ஜமுனா, சி.இ.ஓ., நேர்முக உதவியாளர்கள் சின்னதுரை, ரகுபதி மற்றும் பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

Please Comment