ஆண்ட்ராய்டு மொபைல்களில் ஆதார் ஆணைய ஹெல்ப்லைன் நம்பர் - மன்னிப்பு கோரிய கூகுள்!
பொதுமக்களின் ஆண்ட்ராய்டு போன்களில் பயனாளர்களிடம் கேட்காமலேயே ஆதார் ஆணைய ஹெல்ப்லைன் எண் மற்றும் அவசர உதவிக்கு தேவைப்படும் 112 எண்ணையும் இணைத்துவிட்டதாக கூகுள் நிறுவனத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இது தனிமனிதரின் அந்தரங்கத்தில் தலையிடுவதைப் போன்றது என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு பதிலளித்துள்ள அந்நிறுவனம், ஆண்ட்ராய்டு மொபைல் போன்களில் பயனாளர்களின் ஒப்புதல் இன்றி ஆதார் ஆணையத்தின் வாடிக்கையாளர் சேவை மைய கட்டணமில்லா தொலைபேசி எண்ணையும், அவசர கால உதவிக்குப் பயன்படும் 112 எண்ணையும் இணைத்ததற்காக மன்னிப்பு கேட்பதாகக் கூறியுள்ளது. தங்களது கவனக்குறைவால் கான்டக்ட் லிஸ்டில் இந்த எண்களைச் சேர்த்துவிட்டதாக அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
No comments:
Post a Comment
Please Comment