Ignou - ThulirKalvi Blogs

Latest

Search This Site

Ignou

இக்னோ பல்கலையில் மாணவர் சேர்க்கை ஆக. 16 வரை நீட்டிப்பு



இந்திரா காந்தி தேசிய திறந்த நிலைப்பல்கலைக்கழகத்தின் தொலை நிலைக்கல்வி படிப்புகளுக்கு  விண்ணப்பிக்கும் இறுதிநாள் 16ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது



இந்திரா காந்தி தேசிய திறந்த நிலைப் பல்கலைக்கழகம் மூலம் நடத்தப்படும் தொலைநிலைக் கல்வி  பட்டப்படிப்புகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடக்க உள்ளது



இதற்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் தேதி  ஜூலை 31ம் தேதி என்று ஏற்கனவே பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. இந்நிலையில், ஆகஸ்ட் 16ம் தேதி வரை தேதியை நீட்டித்து பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது



இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் இளநிலை, முதுநிலைப் படிப்புகள், டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளில் தொலை நிலைக் கல்வி திட்டத்தின் கீழ் சேர விரும்பும் மாணவர்கள்  பல்கலைக் கழகத்தின் அந்தந்த மண்டலத்தில் உள்ள அலுவலகங்கள் அல்லது பயிற்சி மையங்களில் நேரடியாக சென்று சேர முடியும்



மேலும் http://onlineadmission.ignou.ac.in/admission/ என்ற  இணைய தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஜூலை 31ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது


இந்நிலையில் மாணவர் வசதிக்காக ஆகஸ்ட் 16ம் தேதி வரை நீட்டித்து என்று பல்கலைக்கழக  சென்னை மண்டல இயக்குநர் கிஷோர் அறிவித்துள்ளார். இதுகுறித்து கூடுதல் விவரம் வேண்டுவோர் 044-26618438, 2661 8039 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment

Please Comment