எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு முதலாமாண்டு வகுப்பு தொடக்கம்: மாணவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு
எம்பிபிஎஸ், பிடிஎஸ் முதலாமாண்டு மாணவர்களுக்கு இன்று வகுப்புகள் தொடங்கியது
மாணவர்களுக்கு பேராசிரியர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வை கட்டாயமாக்கி 2016ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் வாதாடி, நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்றது
இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக தமிழக மருத்துவ இடங்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்காததால் நீட் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இந்தாண்டு மே 6ம் தேதி நீட் தேர்வு நடந்தது. ஜூன் 4ம் தேதி தேர்வு முடிவு வெளியானது
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1ம் தேதி தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்பு தொடங்குவது வழக்கம்
அந்த வகையில், முதல்கட்ட மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்று, அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள 2,447 எம்பிபிஎஸ் இடங்கள், அரசு பல் மருத்துவக்கல்லூரியில் உள்ள 85 இடங்களை தேர்வு செய்த மாணவர்களுக்கு தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் இன்று வகுப்பு தொடங்கியது
சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையுடன் இணைந்த சென்னை மருத்துவ கல்லூரியில் இன்று காலை புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நடந்தது. சென்னை மருத்துவக்கல்லூரியை தேர்வு செய்த மாணவர்கள், தங்களது பெற்றோர்களுடன் வந்திருந்தனர்
மாணவர்களை, சென்னை மருத்துவ கல்லூரி டீன் ஜெயந்தி, உடற்கூறியல் சிகிச்சை துறை தலைவர் சுதா சேசய்யன், பேராசிரியர்கள் வரவேற்று பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினர். அதைத்தொடர்ந்து சென்னை மருத்துவ கல்லூரியின் பழமை, பாரம்பரியம், சிறப்புகள் குறித்து மாணவர்களுக்கு பேராசிரியர்கள் விளக்கினர். இதையடுத்து, புதிய வகுப்புகளுக்கு சென்ற மாணவர்களுக்கு முதல்நாள் வகுப்பு தொடங்கியது. பெற்றோர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்
No comments:
Post a Comment
Please Comment