MBBS - ThulirKalvi Blogs

Latest

Search This Site

MBBS

எம்.பி.பி.எஸ். வகுப்புகள் தொடக்கம்: ராகிங்கில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை



தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் முதலாமாண்டு எம்.பி.பி.எஸ். வகுப்புகள் புதன்கிழமை தொடங்கின


மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் ராகிங்கில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது


தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிப்புகளுக்கான முதல் கட்ட கலந்தாய்வு ஜூலை 1-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை நடைபெற்றது


கலந்தாய்வில் பங்கேற்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு புதன்கிழமை முதல் வகுப்புகள் தொடங்கியுள்ளன


முதலாமாண்டு மாணவர்களுக்கு மூத்த மாணவர்கள் மலர் கொடுத்து வரவேற்றனர். புதிய மாணவர்களை வரவேற்கும் பொருட்டு மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் மருத்துவக் கல்லூரிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன


சென்னையில் உள்ள சென்னை மருத்துவக் கல்லுôரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி, ஓமந்துôரார் அரசு மருத்துவக் கல்லூரியிலும் வரவேற்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன



ஓமந்தூரார் கல்லூரியில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் துறையின் முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று மாணவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்



செல்லிடப்பேசிக்குத் தடை



கல்லூரிக்கு மாணவர்கள் ஜீன்ஸ், டி-சர்ட் அணியக்கூடாது. பேன்ட், முழுக்கை சட்டை, ஷூ அணிய வேண்டும். சேலை, சுடிதார் ஆகிய உடைகளை மாணவிகள் அணியலாம். மேற்கத்திய உடைகளை மாணவர்கள் தவிர்க்க வேண்டும். மாணவிகள் தலை முடியை விரித்து போடக்கூடாது. மாணவர்கள் விடுதியில் செல்லிடப்பேசிகளைப் பயன்படுத்தி கொள்ளலாம்



ஆனால், வகுப்பறைக்குள் பயன்படுத்தக் கூடாது. இதனைப் பின்பற்றாத மாணவர்கள் வகுப்பறைக்குள் நுழைய அனுமதிக்க மாட்டார்கள் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் சார்பில் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது


ராகிங்கில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை



கல்லூரியில் மாணவர்கள் ராகிங்கில் ஈடுபடுவது சட்ட விரோதமானது. ராகிக் குறித்த புகார்களை அந்தந்த மருத்துவக் கல்லூரிகளில் உள்ள ராகிங் தடுப்புக் குழுவினரிடம் மாணவர்கள் தெரிவிக்கலாம்


புகார் நிரூபிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது


புகார் எண்கள்



இந்திய மருத்துவக் கவுன்சிலின் சார்பில் ராகிங் தடுப்பு ஒழுங்குமுறை குழு அமைக்கப்பட்டுள்ளது


மருத்துவ மாணவர்கள் ராகிங் குறித்த புகார்களை 1800111154 என்ற இலவச எண்ணிலும், 011 - 25367033, 25367035, 25367036 என்ற எண்களிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்

No comments:

Post a Comment

Please Comment