உலக கொசு நாள் தினம்:- ஆகஸ்ட்-20.
மனிதர்களுக்கு நோய்களை உண்டாக்குவதில் முதலிடத்தில் உள்ளவை-கொசு..
மலேரியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் ஏற்படுவதற்கு கொசுக்களே காரணம்.
இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட்-20 ஆம் நாள் உலக கொசு ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது
.
வரலாறு:
-
'அனாபெலஸ்' பெண் கொசுக்கள் மூலம் தான் மலேரியா நோய் மனிதர்களுக்கு பரவுகிறது என்பதை 1897 ஆகஸ்ட்-20 ஆம் தேதி கண்டுபிடித்தார்- டாக்டர் ரொனால்டு ரோஸ் (Sir Ronald Ross). இவரது இந்த அரிய கண்டுபிடிப்பை அங்கீகரிக்கும் விதமாக இத்தினமே, உலக கொசு ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
கொசுக்களின் வகைகள்:-
கொசுக்களில் 3000 வகை இருந்தாலும், மலேரியாவை உருவாக்கும் 'அனாபெலஸ்', டெங்குவை உருவாக்கும் 'ஏடிஸ்', யானைக்கால் நோய், மூளைக்காய்ச்சலை உருவாக்கும் 'குளக்ஸ்' ஆகிய மூன்றும் தான் கொடியவை. இதன் பாதிப்புகள் மற்றும் தடுக்கும் முறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்தினத்தின் நோக்கம் ஆகும்.
வரலாறு:
ரொனால்டு ரோஸ், 1857ல் உத்தரகண்டின் அல்மோராவில் பிறந்தார். பள்ளி மற்றும் கல்லுரி படிப்பை லண்டனில் நிறைவு செய்தார். படிப்பை முடித்து இந்தியா திரும்பிய பின், மலேரியாவை பற்றிய ஆராய்ச்சியில் 1882 - 1899 வரை
ஈடுபட்டார்.
ஈடுபட்டார்.
1897ல் மலேரியாவுக்கான காரணத்தை கண்டுபிடித்தார். இதற்காக இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
பிரிட்டன் சார்பில் நோபல் பரிசு வென்ற முதல் நபர் இவரே.
மலேரியா:-
'பிளாஸ்மோடியம்' என்ற ஒட்டுண்ணி 'அனோபிலிஸ்' எனும் பெண் கொசுவின் வயிற்றில் தொற்றிக் கொள்கிறது. இந்த கொசு ஒருவரை கடிப்பதன் மூலம், மலேரியா பரவுகிறது. இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவக் கூடியது. இது உடலில் கல்லீரலை தாக்குகிறது. பின் ரத்த சிவப்பு அணுக்களை தாக்கி அழிக்கிறது. மரணத்தை விளைவிக்கும் அளவு பயங்கரமானது.
தடுக்கும் முறைகள்:-
பொதுவாக கொசுக்கள் நீர்நிலைகளில் தான் முட்டையிட்டு உருவாகின்றன.
எனவே வீடுகளின் அருகில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
டயர்கள், தகரங்கள், பலகைகள், பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றில் மழைநீர் தேங்காமல் அப்புறப்படுத்த வேண்டும்.
சீரான இடைவெளியில் தண்ணீர் சேர்த்து வைக்கும் பாத்திரங்களை சுத்தமாக கழுவி தலைகீழாக வெயிலில் காய வைக்க வேண்டும்.
தண்ணீர் தொட்டிகளை மூடி வைக்க வேண்டும்.
No comments:
Post a Comment
Please Comment