ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நீட் தேர்வு நடத்தப்படும்: மத்திய அரசு அறிவிப்பு
டெல்லி: ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நீட் தேர்வு நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆன்லைனில் நீட் தேர்வு நடைபெறும் என ஜூலை மாதம் வெளியிட்ட அறிவிப்பை மத்திய அரசு திரும்ப பெற்றது. கணினி முறைப்படி நீட் தேர்வு நடைபெறாது என்றும் தெரிவித்துள்ளது.
விடைத்தாள் மூலமாக மட்டுமே 2019 ம் ஆண்டு மே 15 தேதி நீட் தேர்வு நடைபெறும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு முடிவுகள் 2019 ம் ஜூன் 5 ம் வெளியிடப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. சிபிஎஸ்இ-க்குப் பதிலாக இனி என்டிஏ நீர் தேர்வை நடத்தும் என்று தெரிவித்துள்ளது. 2018 நவம்பர் 1 முதல் 30 வரை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
No comments:
Post a Comment
Please Comment