பிளஸ் 2 துணைத் தேர்வு மறுகூட்டல் முடிவு 27ம் தேதி வெளியீடு
சென்னை: பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு எழுதி மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த மாணவ மாணவியரின் திருத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல்கள் 27ம் தேதி வெளியாகிறது என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.பிளஸ் 2 தேர்வில் ஒரு சில பாடங்களில் மட்டும் தோல்வி அடைந்தவர்களுக்காக சிறப்பு துணைத் தேர்வு ஜூன், ஜூலை மாதங்களில் நடந்தது.
்இந்த தேர்வில் பங்கேற்ற மாணவ மாணவியரில் சிலர் தங்களுக்கு மறுகூட்டல், மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என்று விண்ணப்பித்தனர். அதன்படி மறுகூட்டல் செய்யப்பட்ட மற்றும் மறு மதிப்பீடு செய்யப்பட்ட மாணவ மாணவியரின் பதிவெண்கள் பட்டியல் scan.tndge.in என்ற இணைய தளத்தில் 27ம் தேதி மதியம் வெளியிடப்படுகிறது.
No comments:
Post a Comment
Please Comment