'இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி' சேவை விரைவில் துவக்கம்
தமிழகத்தில் 'இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி' சேவையை விரை வில் துவங்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.மக்கள் அனைவருக்கும் வங்கி சேவை கிடைக்க மத்திய அரசு இந்திய தபால் துறை சார்பில் 'இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி' சேவையை துவங்க உள்ளது.
பேமென்ட் வங்கி சேவைக்கு இதுவரை ஏர்டெல், பேடிஎம், பினோ நிறுவனங்கள் மட்டுமே அனுமதி வாங்கியிருந்தன. தற்போது, தபால் துறைக்கும் இந்த அனுமதி கிடைத்துள்ளது. இதை தொடர்ந்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்த பேமென்ட் வங்கி சேவையை தபால் துறையில் மத்திய அரசு துவங்க உள்ளது.கட்டணம் கிடையாது: பேமென்ட் வங்கியில் சேமிப்பு, நடப்பு மற்றும் வைப்பு கணக்கை துவங்கலாம்.
No comments:
Post a Comment
Please Comment