பல்கலைக்கழக மானியக்குழு நடத்திய நெட் தேர்வு முடிவு வெளியீடு: 55 ஆயிரம் பேர் தேர்ச்சி
பல்கலைக் கழக மானியக் குழுவின் 7வது தேசிய தகுதித் தேர்வை (நெட்) சிபிஎஸ்இ கடந்த மாதம் 8ம் தேதி நடத்தியது
இந்த தேர்வில் நாடு முழுவதும் 11 லட்சத்து 48 ஆயிரத்து 235 பேர் பதிவு செய்திருந்தனர். நாடு முழுவதும் 91 நகரங்களில் இந்த தேர்வு நடந்தது. 84 பாடப் பிரிவுகளில் நடத்திய இந்த தேர்வில் இந்த ஆண்டுதான் அதிக அளவில் பட்டதாரிகள் தேர்வு எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
இதற்காக நாடு முழுவதும் 2082 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. 2864 பார்வையாளர்களும், 675 சிபிஎஸ்இ அதிகாரிகளும் இந்த தேர்வுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இரண்டு தாள்கள் கொண்ட தேர்வில் 8 லட்சத்து 59 ஆயிரத்து 498 பேர் எழுதினர். உதவிப் பேராசிரியர்கள் பதவிக்கு 55 ஆயிரத்து 872 பேர் தேர்வு பெற்றுள்ளனர்
அவர்களில் ஜேஆர்எப் என்ற தகுதிக்கு 3929 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்
கடந்த தேர்வுகளில் 3 தாள்கள் இருந்த நிலையில் தற்போது 2 தாள்கள் கொண்ட தேர்வாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது
தேர்வு நடந்த 3 வார காலத்துக்குள் 31ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு எழுதியவர்கள் தங்களின் ஓஎம்ஆர் தாள்களை பார்வையிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மேற்கண்ட தேர்வில் இடம் பெற்ற கேள்வித்தாளில் சந்தேகம் ஏதாவது இருந்தால் தேர்வு எழுதியவர்கள் தெரிவிக்கலாம்
பல்கலைக் கழக மானியக் குழுவின் விதிகளின்படி இரண்டு தாள்கள் எழுதியவர்கள் பெற்ற குறைந்த பட்ச மதிப்பெண்கள் 6 சதவீதம் பேர் பெற்றுள்ள விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. விரைவில் தகுதி் பெற்றவர்களுக்கான சான்றுகள் வழங்கப்படும் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது
No comments:
Post a Comment
Please Comment