வாட்ஸ்அப் செயலியில் க்ரூப் காலிங் அம்சத்தை பயன்படுத்துவது எப்படி?
ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்அப் 2018 F8 நிகழ்வில் வாட்ஸ்அப் செயலியில் க்ரூப் வாய்ஸ் மற்றும் கால் அம்சம் விரைவில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பின் சில வாரங்களில் புதிய அம்சம்த்திற்கான சோதனை துவங்கப்பட்டது.
இந்நிலையில், வாட்ஸ்அப் செயலியில் வாய்ஸ் மற்றும் க்ரூப் கால் அம்சம் அனைவருக்கும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை பார்ப்போம்.
இதெல்லாம் இருக்கா?
- ஆன்ட்ராய்டு tஅல்லது ஐஓஎஸ் தளங்களுக்கான அப்டேட் செய்யப்பட்ட வாட்ஸ்அப் செயலி.
- சீராக வேலை செய்யும் இன்டர்நெட் இணைப்பு.
மேற்கொள்ள வேண்டியவை:
வாட்ஸ்அtப் செயலியில் க்ரூப் கால் செய்ய முதலில் ஒரு வாய்ஸ் அல்லது கால் செய்ய வேண்டும்.
வாய்ஸ் க்ரூப் கால் செய்ய:
1 - ஹோம் ஸ்கிரீனில் இருந்து வாட்ஸ்அப் செயலியை திறக்க வேண்டும்.
2 - நீங்கள் அழைக்க வேண்டிய காண்டாக்ட்-ஐ தேர்வு செய்ய வேண்டும்.
3 - வலது புறம் காணப்படும் வாய்ஸ் கால் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.
4 - அழைப்பு இணைக்கப்பட்டதும், வலது புறத்தில் உள்ளt "add participant" பட்டனை க்ளிக் செய்து நீங்கள் சேர்க்க வேண்டிய கான்டாக்ட்களை சேர்த்துக் கொள்ளலாம்.
5 - நீங்கள் அழைக்க வேண்டிய மற்றொரு காண்டாக்ட்t-ஐ தேர்வு செய்து Add பட்டனை க்ளிக் செய்யலாம்.
6 - தொடர்ந்து அழைப்பாளர்களை அதிகரிக்க 4-வது வழிமுறையை பின்பற்றலாம்.
க்ரூப் கால் செய்ய:
1 - ஹோம் ஸ்கிரீனில் இருந்து வாட்ஸ்அப் செயலியை திறக்க வேண்டும்.
2 - கால்ஸ் டேப் சென்று டையலர் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். இதனை திரையின் கீழ் உள்ள வலது புறத்தில் பார்க்க முடியும்.
3 - இங்கு நீங்கள் கால் செய்ய வேண்டிய முதல் நபரைt தேர்வு செய்து பட்டனை க்ளிக் செய்து அவருடன் கால் துவங்க வேண்டும்.
4 - இனி, "add participant" பட்டனை க்ளிக்
செய்து இரண்டாவது நபரை தேர்வு செய்து add பட்டனை க்ளிக் செய்யலாம்.
5 - தொடர்ந்து அழைப்பாளர்களை அதிகரிக்க 4-வது வழிமுறையை பின்பற்றலாம்.
குறிப்பு: அதிகபட்சம் ஒரே சமயத்தில் நான்கு பேருடன் க்ரூப் கால் செய்ய முடியும்.
No comments:
Post a Comment
Please Comment