Whatsapp - ThulirKalvi Blogs

Latest

Search This Site

Whatsapp

இந்தியாவில் வாட்ஸ்அப் செயலி இப்படித் தான் இயங்க வேண்டும் - மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்



இந்தியாவில் வாட்ஸ்அப் செயலியில் மாற்றங்களை கொண்டு வரும் நோக்கில் வாட்ஸ்அப் சி.இ.ஒ. மற்றும் மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
வாட்ஸ்அப் செயலி தவறாக பயன்படுத்தப்படுவது குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வாட்ஸ்அப் நிறுவனம் இந்திய சட்ட அமைப்புகளுடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என மத்திய தகவல் தொழில்நுட்ப மந்திரி ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.



இந்தியா வந்துள்ள வாட்ஸ்அப் தலைமை செயல் அதிகாரி க்ரிஸ் டேனியல்ஸ் இன்று மத்திய தகவல் தொழில்நுட்ப மந்திரி ரவி சங்கர் பிரசாத்தை சந்தித்தார். சந்திப்புக்கு பின் பேசிய மத்திய மந்திரி வாட்ஸ்அப் தளம் தவறாக பயன்படுத்தப்படுவதை குறைக்க புதிய சட்டம் மற்றும் வழிமுறைகளை கண்டறியப்பட வேண்டும் என தெரிவித்தார்.



இந்திய சட்ட விதிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பல்வேறு குற்றசம்பவங்களுக்கு வாட்ஸ்அப் பயன்படுத்தப்படுகிறது, இவற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய தீர்வுகள் கண்டறியப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இவற்றை கருத்தில் கொண்ட வாட்அஸ்அப் தலைமை செயல் அதிகாரியிடம் மூன்று அம்சங்களை செய்ய பரிந்துரை வழங்கியதாக மத்திய மந்திரி தெரிவித்தார். அதன்படி குறைகளை களைய இந்தியாவுக்கான அதிகாரி, கார்ப்பரேட் நிறுவன கட்டமைப்பு மற்றும் இந்திய விதிகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.



வாட்ஸ்அப் தலைமை செயல் அதிகாரியுடனான சந்திப்பு சிறப்பான ஒன்றாக அமைந்தது. இந்தியாவில் வாட்ஸ்அப் பயன்பாடு ஏற்படுத்தியிருக்கும் நன்மைகளை விளக்கி அவரிடம் நன்றி தெரிவித்ததாகவும் மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.
க்ரிஸ் டேனியல்ஸ் வாட்ஸ்அப் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்று உறுதியளித்ததாக மந்திரி ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Please Comment