புதிய ரூ.2,000, ரூ.200 நோட்டு வெளியிட்ட பிறகு, கிழிந்த ரூபாய் நோட்டு மாற்றுவதற்கான விதியை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. கருப்பு பணம் மற்றும் கள்ளt நோட்டை ஒழிக்கும் வகையில் பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டு செல்லாது என மத்திய அரசு கடந்த 2016 நவம்பர் 8ம் தேதி அறிவித்தது.
இதன்பிறகு புதிய ரூ.500 மற்றும் ரூ.2,000, ரூ.200 நோட்டு அறிமுகம் செய்யப்பட்டது. இவற்றில் ரூ.2,000 ரூ.200 நோட்டு தவிர மற்ற நோட்டு கிழிந்து விட்டால் மாற்ற விதி உள்ளது. இந்நிலையில் புதிய நோட்டு அறிமுகத்துக்கு பிறகு அதற்கான விதிகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.இதன்படி, பொதுமக்கள் சிதைந்த, கிழிந்த ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கி அலுவலகங்கள் மற்றும் வங்கி கிளைகளில் மாற்றிக்கொள்ளலாம். கிழிந்த ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்கான ரிசர்வ் வங்கி விதி 2009ல், புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட, ஏற்கெனவே உள்ள நோட்டை விட அளவில் சிறிய மகாத்மா காந்தி வரிசை நோட்டும் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த விதிகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன.கிழிந்த ரூபாய் நோட்டின் தன்மை, சேத அளவுக்கு ஏற்ப பாதி பணம் அல்லது முழு பணம் கிடைக்கும். எனவே, அதிகமாக சிதைந்த நோட்டுக்கு பாதி பணம் மட்டுமே வழங்க முடியும். இதுபோல், ₹50 மற்றும் அதற்கு மேல் மதிப்பிலான கிழிந்த ரூபாய் நோட்டை மாற்றும்போது, நோட்டின் கிழிபடாத பெருமளவு பகுதி சமர்ப்பிக்க வேண்டும்.
இதற்கேற்பத்தான் முழு பணம் வழங்குவது பற்றி முடிவு செய்யப்படும் என ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.

No comments:
Post a Comment
Please Comment