3 ஆண்டு எம்டி யோகா படிப்புக்கு 3ம் தேதி முதல் விண்ணப்பம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

3 ஆண்டு எம்டி யோகா படிப்புக்கு 3ம் தேதி முதல் விண்ணப்பம்

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் கீழ் நடத்தப்படும் இந்திய மருத்துவ படிப்புகளில் ஒன்றான யோகா மற்றும் இயற்கை மருத்துவம் தொடர்பான பட்டம் பெற்றவர்கள் இந்த ஆண்டில் 3 ஆண்டு கால முதுநிலை பட்டப்படிப்பான எம்டி யோகா மற்றும் இயற்கை மருத்துவம் படிக்க தற்போது விண்ணப்பிக்கலாம். 



3ம் தேதி முதல் 21ம் தேதி வரை சுகாதாரத் துறையின் இணைய தளமான www.tnhealth.org என்ற இணைய தளத்தில் இருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். 






பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க 21ம் தேதி கடைசி நாள். இதையடுத்து முதுநிலை பட்ட மேற்படிப்புக்கு 30ம் தேதி நுழைவுத் தேர்வு நடக்கும். இதுதொடர்பாக மேலும் கூடுதல் விவரம் வேண்டுவோர் சுகாதாரத் துறையின் மேற்கண்ட இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Please Comment