இந்திய மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக இரண்டாம் சுற்றுக்கான விருப்பப் பாடங்கள், விருப்பக் கல்லூரிகளின் பட்டியலை பதிவுசெய்யும் நடைமுறை அக். 3-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதுகுறித்து கர்நாடக தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2018-19-ஆம் ஆண்டில் இந்திய மருத்துவங்களான ஆயுர்வேதம், சித்தா, ஹோமியோபதி, யுனானி போன்ற மருத்துவக் கல்வி, கால்நடை, பண்ணை அறிவியல் கல்வி மாணவர் சேர்க்கை பெறுவதற்கு முன் மாணவர்கள் தெரிவுசெய்ய விரும்பும் விருப்பப் பாடங்கள், விருப்பக் கல்லூரிகளின் பட்டியலை இணையதளத்தில் பதிவுசெய்வது அவசியமாகும்.
சேர்க்கை இடங்களின் கையிருப்பு மற்றும் கட்டண விவரங்கள் செப். 28-ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. அக். 3-ஆம் தேதி காலை 11 மணி வரை விருப்பப் பாடங்கள், விருப்பக் கல்லூரிகளை www.kea.kar.nic.in என்ற இணையதளத்தில் பதிவுசெய்யலாம். இதனடிப்படையில், அக். 3-ஆம் தேதி மாலை 6 மணிக்கு ஜ்ஜ்ஜ்.ந்ங்ஹ.ந்ஹழ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் இரண்டாம் சுற்றுக்கான இறுதிச் சேர்க்கை இடங்கள் ஒதுக்கீட்டு பட்டியல் வெளியிடப்படுகிறது.
ஒதுக்கப்பட்டுள்ள இடங்களை மாணவர்கள் ஏற்றுக்கொண்டால், அக். 5-ஆம் தேதிக்குள் அதை இணையதளத்தில் உறுதி செய்து, கட்டணங்களை செலுத்தலாம். இதைத் தொடர்ந்து, அக். 6-ஆம் தேதி மாலை 5.30-க்குள் கல்லூரிகளுக்கு சென்று சேர்க்கையை உறுதி செய்து கொள்ளலாம். இதற்காக பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து இணையதளத்தில்
விளக்கப்பட்டுள்ளது.


No comments:
Post a Comment
Please Comment