அரசு பள்ளியில் 'ஸ்மார்ட் கிளாஸ்'; 540 மாணவர்களுடன் ஆரம்ப கல்வி - ThulirKalvi Blogs

Latest

Search This Site

அரசு பள்ளியில் 'ஸ்மார்ட் கிளாஸ்'; 540 மாணவர்களுடன் ஆரம்ப கல்வி

குழந்தைகள் அடிப்படைக் கல்வியை கற்பது தொடக்கப் பள்ளிகளில்தான். விளையாடும் பருவத்தில் உள்ள இக்குழந்தைகளை படிப்பில் கவனம் செலுத்த வைப்பது தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு பெரிய சவால்தான். அவர்களுடைய மன நிலை அறிந்து அதற்குத் தகுந்தவாறு பாடம் நடத்த வேண்டும். இல்லையெனில் பெரும்பாலான குழந்தைகள் பாடத்தை கவனிக்க மாட்டார்கள். எனவேதான் தனியார் பள்ளிகளில் அவர்களுக்கு தகுந்தவாறு பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி கல்வி கற்பிக்கிறார்கள். குழந்தைகளுக்கு முதலில் நல்ல காற்றோட்டமான சூழ்நிலை அமைய வேண்டும். 




குழந்தைகளுக்கு ஆசிரியர்களைப் பிடிக்க வேண்டும். பின்னர்தான் அவர்கள் ஆசிரியர் சொல்வதை , நடத்துவதை கவனிப்பார்கள்.பள்ளிகளில் நன்றாக, சுமாராக, மெதுவாக கற்கும் மாணவர்களை கண்டறிந்து அந்தந்த மாணவர்களுக்கு தகுந்தவாறு பாடம் நடத்துவர். ஆனால் திருத்தங்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இத்தகைய பிரிவுகளுக்கு வேலை இல்லை. அனைத்து குழந்தைகளுக்கும் ஒரே மாதிரிதான் ஆசிரியர்கள் பாடம் நடத்துகிறார்கள். அனைவரும் ஆர்வமாகக் கற்கிறார்கள். 122 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டஇப்பள்ளியில் தலைமையாசிரியர், உதவியாசிரியர் உட்பட 17 ஆசிரியர்கள் பணி புரிகின்றனர்.




இங்கு ஆங்கில வழி மற்றும் தமிழ் வழியில் 540 மாணவர்கள் படிக்கிறார்கள். எந்தவொரு அரசு தொடக்கப்பள்ளியிலும் இவ்வளவு மாணவர்கள் நிச்சயமாக கிடையாது. திருத்தங்கல் பகுதியில் மட்டும் 10 தனியார் பள்ளிகள் இருந்தும் இங்கு மாணவர் சேர்க்கை அதிகமாக உள்ளது. 2014 ல் ஒரே ஒரு ஸ்மார்ட் கிளாஸ் மட்டுமே இங்கு இருந்தது.




தற்போது ஒவ்வொரு வகுப்பிலும் டிஜிட்டல் முறையில்'ஸ்மார்ட் கிளாஸ்' பாடம் நடத்தப்படுகிறது. புத்தகத்தில் உள்ள கியூ.ஆர்., கோட்டிலிருந்து அலைபேசியில் 'ஸ்கேன்' செய்து எல்.இ.டி., 'டிவி' திரையில் பாடம் நடத்தப்படுகிறது. மாணவர்கள் மிகவும் ஆர்வமுடன் கவனிக்கிறார்கள். புத்தகத்தில் உள்ள பாட்டு, கதை போன்றவைகளுக்கு பெண் ஆசிரியர்கள் நடனமாடி மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் பாடம் நடத்துகிறார்.




மேலும் ,தேசத் தலைவர்கள் பிறந்த நாளில் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை, யூ டியுப் மூலமாக இதே போல் விளக்குகிறார்கள். பள்ளி சுவற்றில் வாய்ப்பாடு எழுதப்பட்டு மாணவர்கள் அவர்களாக ஒன்று சேர்ந்து படிக்கிறார்கள். தனியார் பள்ளிகளுக்கு இணையான வசதி இங்குள்ளதால் பெற்றோர் தங்களது பிள்ளைகளை இங்கு சேர்க்க ஆர்வம் காட்டுகின்றனர். தனியார் பள்ளிகளில் போலவே இப்பள்ளி ஆசிரியர்கள் காலை 8:30 மணிக்கே வந்து விடுகின்றனர்.

மற்றொரு சிறப்பு குழந்தைகள் விடுமுறை எடுப்பது மிகவும் அரிது.

No comments:

Post a Comment

Please Comment