ஆசிரியர் பணியிடங்களில் காலியிடமே இல்லை என்ற நிலை உருவாகும்: அமைச்சர் செங்கோட்டையன் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

ஆசிரியர் பணியிடங்களில் காலியிடமே இல்லை என்ற நிலை உருவாகும்: அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் ஆசிரியர்பணியிடங்களில் காலியிடமே இல்லை என்ற நிலையை அரசு உருவாக்கும் என தமிழகபள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.




இன்று சென்னை புரசைவாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், "தமிழகம் முழுவதும் உள்ள 412 நீட் பயிற்சி மையங்கள், இன்று முதல் செயல்படத்தொடங்கும். சுமார்3000 ஆசிரியர்களை கொண்டு 3 மணி நேரம் பயிற்சி வழங்கப்படும்.ஜெ.இ.இ தேர்வை தமிழ் மொழியில் எழுத மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.





தமிழகத்தில் ஆசிரியர் பணியிடங்களில் காலியிடமே இல்லை என்ற நிலையை தமிழக அரசு ஏற்படுத்தும். அரசுப்பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் 5 தற்காலிக ஆசிரியர்களை தேர்வு செய்து கொள்ளலாம். சட்ட சிக்கல் தீர்ந்த பின் அவர்கள் நியமன தேதி பின்னர் அறிவிக்கப்படும்" என்றார்.

No comments:

Post a Comment

Please Comment