மாணவர்களுக்கு உதவித்தொகை; பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

மாணவர்களுக்கு உதவித்தொகை; பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம்

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்ட தேர்வுக்கான விண்ணப்பங்களை வரும், 17ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்' என, கல்வி மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. உதவித்தொகை வழங்க, மாணவர்களை தேர்வு செய்யும் பொருட்டு தேசிய வருவாய் வழி மற்றும் திறன்படிப்பு உதவித்தொகை தேர்வு, வட்டார அளவில் மையங்கள் அமைக்கப்பட்டு, வரும் டிச., 1ம் தேதி நடக்கிறது.













இதற்கான, விண்ணப்பங்களை வரும், 17ம் தேதி முதல், 30ம் தேதி வரை www.dge.tn.gov.inல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் படிக்கும் பள்ளி வாயிலாக மட்டும் விண்ணப்பிக்க முடியும்.தலைமையாசிரியர்கள் தேவையான விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.நடப்பு கல்வியாண்டில், எட்டாம் வகுப்பு பயிலும் தகுதியுடைய மாணவர்களிடம் கொடுத்து, பெற்றோர் உதவியுடன் பூர்த்தி செய்ய வேண்டும்.புகைப்படம் ஒட்டி, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பள்ளி தலைமையாசிரியரிடம் தேர்வு கட்டணம், 50 ரூபாய் உடன் வரும் அக்., 1ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்.

No comments:

Post a Comment

Please Comment