இன்று உலக சுற்றுலா தினம்
சுற்றுலா, சுற்றுலா செல்ல விரும்பாத மனிதர்கள் எவரும் இருக்கமாட்டார்கள். இன்று மனிதன் நிலாவுக்கும் சுற்றுலா செல்ல தயாராகிவிட்டான். உலக சுற்றுலா அமைப்பின் சொற்பொருள் விளக்கத்தின் படி வழக்கமான இடத்தை விட்டு வேறு ஒரு இடத்துக்கு ஓய்வு அல்லது மற்ற ஏனைய நோக்கங்களுக்காக சென்று தங்கி வருவது சுற்றுலா என்று கூறப்படுகிறது. ஆனால், நமக்கு சுற்றுலா என்ற வார்த்தை வெறும் பயணம் என்ற சொல்லோடு மட்டும் முடிவு பெற்றுவிடாது. நண்பர்களோடு போனது, சின்ன வயதில் உறவினர்களோடு சென்ற சுற்றுலா என நம் வாழ்வின் ஏகப்பட்ட ஞாபகங்களும், சங்தோஷங்களும் நிறைய இருக்கும்!!! சொல்லும்போதே பலருக்கும் சில நினைவுகள் வந்திருக்கும். இதெல்லாம் ஏன் இப்போ என யோசிப்பவர்கள் கவனத்திற்கு,இன்று உலக சுற்றுலா தினம்.
எதற்காக சுற்றுலா (தினம்) தெரியுமா?
சுற்றுலா தினத்தின் முக்கிய மேற்கோள், சுற்றுலா மூலம், பொருளாதார அபிவிருத்தி, சர்வதேச புரிந்துணர்வு, சமாதானம் ஆகியவற்றை மேம்படுத்துதலும் மனித குலம் முழுவதும் அடிப்படைச் சுதந்தரத்தை அடைவது குறித்த அறிவுகளை பெறுவதும் தான்.
சுற்றுலா தினம்:
சுற்றுலாவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் நோக்கிலும், சுற்றுலாவில் நாட்டின் பொருளாதாரமும் உண்டு என்பதை விவரிக்கும் நோக்கிலும் உலக சுற்றுலா தினம் கொண்டாடப்படுகிறது. உலகில் உள்ள பல்வேறு நாடுகள் சுற்றுலாவை தங்களது கலாச்சாரத்திற்குள் வைத்துள்ளன. சுற்றுலா மூலம் மனித குலத்தை மேம்படுத்தும் வகையில், செப். 27ம் தேதியை உலக சுற்றுலா தினமாக 1970ம் ஆண்டு ஐ.நா.சபை அங்கீகரித்து அறிவித்தது. அவ்வகையில் உலக சுற்றுலா தினம் உலக சுற்றுலா நிறுவனத்தின் (WTO) ஆதரவில் 1980ல் இருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் பின்னர் தான் சுற்றுலாவுக்கான தினம் என்று ஒன்று தனியாக கொண்டாடப்படுகிறது. இப்போது சுற்றுச்சூழல் சுற்றுலா, பாரம்பரிய சுற்றுலா, கலாச்சார சுற்றுலா, கல்வி சுற்றுலா என பல வகைகளாகப் பிரிந்து வளர்ந்துள்ளது.

No comments:
Post a Comment
Please Comment