தொழிநுட்ப வளர்ச்சியின் அடுத்த தலைமுறை தயாரிப்பாக கனடாவின் குயின்ஸ் பல்கலைக்கழகத்தின் ஹியூமன் மீடியா லேப் ஐ சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் "உலகின் முதல் சுருளும் டேப்லெட் கணினி(world's first rollable tablet PC)"யை உருவாக்கியுள்ளனர். Scientists have created what they call the 'world's first rollable tablet PC.'
உலகின் முதல் கணினியை வைப்பதற்கு ஒரு பெரிய அறை தேவைப்பட்டது என்பது நாம் அனைவரும் அறிந்தது. தொழில்நுட்ப வளர்ச்சியின் மூலம் டெஸ்க்டாப், லேப்டாப் மற்றும் கையடக்க கணினி என்று பல உருவங்களைப் பெற்றுவிட்டது.
தொழிநுட்ப வளர்ச்சியின் அடுத்த தலைமுறை தயாரிப்பாக கனடாவின் குயின்ஸ் பல்கலைக்கழகத்தின் ஹியூமன் மீடியா லேப் ஐ சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் "உலகின் முதல் சுருளும் டேப்லெட் கணினி(world's first rollable tablet PC)"யை உருவாக்கியுள்ளனர்.


"மேஜிக் ஸ்க்ரோல்"
பழங்காலத்தில் செய்திகளை அனுப்பப் பயன்படுத்தப்படும் சுருள்களைப் போல் இந்த டேப்லெட் வடிவமைக்கப்பட்டிருப்பதால் இதற்கு "மேஜிக் ஸ்க்ரோல்" என்று பெயரிடப்பட்டுள்ளது. 2K ரெசொலூஷனுடன் 7.5 இன்ச் உள்ள இதன்t தொடுதிரை சுருட்டி வைத்துக்கொள்ளம் ஒரு உருளை அமைப்புடன் வருகிறது.

ரோலோடேக்ஸ்
முன்பு வந்த ரோலோடேக்ஸ் போலவே இதன் உருளையின் இருபக்கத்திலும் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்தச் சக்கரங்களின் மூலம் திரையில் உள்ள கான்டாக்ட்ஸ்t மற்றும் செய்திகளை மேலும் கீழும் நகர்த்திக்கொள்ளலாம்.

கேமெரா சேவை கெஸ்ச்சர் கண்ட்ரோல்
மேஜிக் ஸ்க்ரோல் கேமெரா சேவைகள் கெஸ்ச்சர் கண்ட்ரோல் மூலம் கட்டுப்படுத்தப்படும் வசதி கொண்டுள்ளது. சுருளும் வசதி மூலம் கையடக்கமாகt வருவதால் இந்த டேப்லெடை ஒரு கையில் வைத்தே உபயோகிக்கலாம்.

பேனா அளவில் டேப்லெட்
இந்த மேஜிக் ஸ்க்ரோல் போலவே ஏதிர் காலத்தில் இன்னும் அடக்கமாகச் சட்டை பையில் வைக்கும் பேனா அளவிற்கு டேப்லெட் கொண்டுவரப்போவதாக ஹியூமன் மீடியா லேபின் இயக்குநர் ரோயல் வெர்டேகல் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
Please Comment