கடலுார் மாவட்டத்தில் 'நீட்' தேர்வு பயிற்சி மையங்களை தொழிற்கல்வி இணை இயக்குனர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.தமிழகத்தில் வருவாய் மாவட்டங்கள் வாரியாக பள்ளிகளை ஆய்வு செய்ய அதிகாரிகளை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, கடலுார் வருவாய் மாவட்டத்தை ஆய்வு செய்ய தொழிற்கல்வி இணை இயக்குனர் சுகன்யா நோடல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.இவர், கடலுார் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நேற்று நேர்முக உதவியாளர், கண்காணிப்பாளர் உதவியாளர், இளநிலை உதவியாளர் ஆகியோரின் பணி சார்ந்த பதிவேடுகளை ஆய்வு செய்தார்.தொடர்ந்து, கடலுார் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி மற்றும் மேல்பட்டாம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆன் லைன் மூலம் நடைபெறும் 'நீட்' தேர்வு பயிற்சி மையங்களை ஆய்வு செய்து, பயிற்சி பெறும் மாணவர்கள் எண்ணிக்கை குறித்து அதிகாரிகளிடமும், பயிற்சி பயனுள்ளதாக உள்ளதா என மாணவர்களிடமும் கேட்டறிந்தார்.
இதேப்போன்று, கடலுார் கிருஷ்ணசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், தனியார் பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரியும் ஆசிரியர் கல்வித் தகுதி முடிக்காதவர்களுக்கான டிப்ளமோ இன் எலிமென்ட்ரி எஜூகேஷனல் தேர்வையும் ஆய்வு செய்தார். முதன்மைக் கல்வி அதிகாரி பழனிசாமி உடனிருந்தார்.
No comments:
Post a Comment
Please Comment