நல்லாசிரியர் தினம் : கூகுள் கவுரவிப்பு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

நல்லாசிரியர் தினம் : கூகுள் கவுரவிப்பு

புதுடில்லி: தேசிய நல்லாசிரியர் தினத்தை முன்னிட்டு கூகுள் நிறுவனம் டுடூல் மூலம் சிறப்பித்துள்ளது. 

முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் 1888-ம் ஆண்டு செப்.5-ம் தேதி பிறந்த நாளை முன்னிட்டு நாடு முழுவதும் தேசிய நல்லாசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தில் பள்ளிகளில் சிறப்பாக பணி புரியும் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு ஆண்டு தோறும் மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பில் நல்லாசிரியர் விருதுவழங்கப்பட்டு கவுரவிக்கப்படுகின்றனர். 
கூகுள் நிறுவனம் தன்னுடைய டுடூல் பக்கத்தில் ஒவ்வொரு நாளும் அன்றைய சிறப்பை குறிக்கும் வகையில் டுடூலை வடிவமைப்பது வழக்கம் .அதுபோல் இன்றயை ஆசிரியர் தினத்தையும் தனது டுடூல் மூலம் ஆசிரியர் தினத்தை கவுரவித்துள்ளது. இந்தியாவில் ஆசிரியர் தினம் செப்.,5-ம் தேதி கொண்டாடப்படுவதை போல் உலக ஆசிரியர் தினம் அக்டோபர் மாதம் 5-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Please Comment