உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளபடி வங்கிக் கணக்கு தொடங்க ஆதார் கட்டாயமல்ல. ஆனால், வாடிக்கையாளர்கள் சுயவிருப்பத்தின் அடிப்படையில் ஆதார் வழங்கலாம் என்று எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்ற போதிலும், வங்கிக் கணக்கு தொடங்குவதற்கான நடைமுறைகளை மிக எளிதாக்குவதாக ஆதார் இருந்தது என்றும் எஸ்பிஐ கூறியுள்ளது.
இதுதொடர்பாக, எஸ்பிஐ வங்கித் தலைவர் ரஜனீஷ் குமார், மும்பையில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஒவ்வொரு நபரும் மதிக்க வேண்டும். அதே சமயம், வங்கிச் சேவை அடிப்படையில் பார்க்கும்போது ஆதார் மிக உதவிகரமாக இருந்தது. ஆதாரைப் பயன்படுத்தி வங்கிக் கணக்கு தொடங்குவது மிக எளிதானதாக இருந்தது. இன்றைக்கு இருக்கும் தொழில்நுட்பங்களை கணக்கில் கொள்ளும்போது, ஆதார் அட்டையை ஒருவர் பயன்படுத்தினால், வெறும் 5 நிமிடங்களில் வங்கிக் கணக்கை தொடங்கி, அதை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வர முடியும்.
தற்போதைய சூழலில், எஸ்பிஐ வங்கியில் 80 முதல் 85 சதவீதம் வரையிலான வங்கிக் கணக்குகள்ஆதாரோடு இணைக்கப்பட்டுள்ளன.
பேப்பர் பயன்பாடு எதுவுமின்றி யோனோ என்ற செயலியில் நாளொன்றுக்கு 27,000 டிஜிட்டல் கணக்குகள் தொடங்கப்படுகின்றன. எஸ்பிஐ வங்கிகளில் இனி ஆதார் கட்டாயம் கிடையாது. ஆனால்,
வாடிக்கையாளர்கள் விரும்பினால் கொடுக்கலாம் என்றார் அவர்.


No comments:
Post a Comment
Please Comment