பிளஸ் 2 பொதுத் தேர்வில் முதல் மற்றும் இரண்டாமிடம் பெற்ற முன்னாள்படை வீரர்களின் சிறார்கள் கல்வி ஊக்கத் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து, தருமபுரி மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி அண்மையில் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பிளஸ் 2 பொதுத் தேர்வில் கடந்த 2017 - 18 -ஆம் கல்வியாண்டில் மாவட்ட அளவில் முதல் மற்றும் இரண்டாமிடம் பெற்ற முன்னாள்படை வீரர்களின் சிறார்களுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கப்பட உள்ளது.
மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு ரூ.10,000, இரண்டாம் மதிப்பெண் பெற்றவர்களுக்கு ரூ.7,000, மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு ரூ.5,000 மற்றும் இரண்டாம் மதிப்பெண் பெற்றவர்களுக்கு ரூ.3,000 வழங்கப்பட உள்ளது.எனவே, 2017 - 2018 -ஆம் ஆண்டு பிளஸ் 2 தேர்வில் 95 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ள முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் விவரத்தை தருமபுரி மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்துக்கு செப்.28-ஆம் தேதிக்குள் நேரிலோ, அஞ்சல் மூலமோ விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
Please Comment