Face porting - ThulirKalvi Blogs

Latest

Search This Site

Face porting

ஒருமுறை முகத்தை காட்டினால் மறுமுறை பாஸ் தேவையில்லை





தெலங்கானாவின் ஐதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில், இனி பயணிகளின் முகமே போர்டிங் பாஸாக இருக்க போகிறது என்று அதன் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், 'ஒருமுறை பயணிகளின் முகம் அதற்கென உள்ள பிரத்யேக மற்றும் நவீன கேமராவில் பதிவு செய்யப்படும். இதையடுத்து அவர்களின் அடுத்தடுத்த பயணங்களில், பாதுகாப்பு சோதனைகளின் போது, அவர்கள், தங்கள் முகத்தை கேமரா முன் காட்டினால் போதும். ஏற்கனவே பதிவான விவரங்கள் அதிகாரிகளுக்கு தெரிந்துவிடும். இந்தியாவில் முதல்முறையாக இந்த முக அடையாள நடைமுறை விரைவில் செயல்பாட்டிற்கு வரவுள்ளது' என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Please Comment