Good touch - ThulirKalvi Blogs

Latest

Search This Site

Good touch

`குட் டச் - பேட் டச்'- மாணவர்களுக்கு விழிப்புஉணர்வு பயிற்சி அளிக்கும் அரசு
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு `குட்- டச், பேட் -டச்சை' விளக்கும் விதமாக விழிப்புஉணர்வு நிகழ்ச்சிக்கு மாநிலப் பள்ளிக்கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது.

குழந்தைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிறுமிகள் தங்களுக்கு நடக்கும் பாலியல் சீண்டல்கள் மட்டும் துன்புறுத்தல் குறித்து அறியாமையில் உள்ளனர். சிறுமிகளின் உடலில் இருக்கும் சில காயங்கள் போன்றவற்றை விசாரிக்கும் போதுதான் பெற்றோர்களுக்கு அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவருகின்றன.


இந்த நிலையில் ஜெய்பூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு `குட்- டச், பேட்- டச்' குறித்த விழிப்புஉணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.
இதுகுறித்து பேசிய அதிகாரிகள் ``1 ம் வகுப்பு முதல் ப்ளஸ் 2 வரை பயிலும் மாணவர்களுக்கு மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் இந்த விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். ஐந்தாம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 6 முதல் 8-ம் வகுப்பு வரை மற்றொரு பிரிவாகவும், 9 முதல் 12-ம் வரை ஒரு பிரிவாகவும் பிரிந்து இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில் மாணவர்களுக்குப் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. `குட்- டச், பேட்- டச்' குறித்து பதாகைகள் மூலம் விளக்கமளிக்கப்படுகிறது. 6 பிரிவுகளாக இந்தப் பயிற்சி நடத்தப்படுகிறது. மனித உரிமைகள், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான உரிமைகள் ஆகியவற்றை இதில் மாணவர்களுக்கு எடுத்துரைக்க உள்ளோம். மாணவர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது'' என்றனர்.

No comments:

Post a Comment

Please Comment