பணியாளர் தேர்வின் போது நேர்காணல் எதற்காக நடத்தப்படுகிறது? - ThulirKalvi Blogs

Latest

Search This Site

பணியாளர் தேர்வின் போது நேர்காணல் எதற்காக நடத்தப்படுகிறது?

பணியாளர் தேர்வின் போது நேர்காணல் எதற்காக நடத்தப்படுகிறது?



நேர்காணல் என்பது பல்வகை அம்சங்களை உட்கொண்ட ஒரு கடினமான பணியாகும். இதன்மூலம் பணியாளர் தொடர்பான அனைத்து தகவல்களும் திரட்டப்படுகின்றன.



பணியாளர் தேர்வுக்கு பெருவாரியாக பயன்படுத்தப்படும் வழிமுறையே நேர்காணல் ஆகும். இதில், தேர்வு செய்ய வேண்டிய பணியாளர்களை நிறுவன முதலாளியோ அல்லது அவர் சார்பாக உரிய மேலாளரோ அல்லது நியமனம் செய்யப்பட்ட தேர்வுக்குழுவோ நேர்காணலில் கலந்து கொண்டு பணியாளர்களை தேர்ந்தெடுக்கின்றனர்.
நேர்காணல் என்பது பல்வகை அம்சங்களை உட்கொண்ட ஒரு கடினமான பணியாகும். இதன்மூலம் பணியாளர் தொடர்பான அனைத்து தகவல்களும் திரட்டப்படுகின்றன.




பணியாளரை தேர்வு செய்யும்போது அவர்களது பணி பற்றி கலந்து ஆலோசிக்கவும், அவர்கள் பணியின் போது தவறு செய்ய நேர்ந்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நேரிடும் என்பது குறித்தும் தெளிவாக எடுத்து கூறப்படுகிறது
நேர்காணலுக்கு வந்தவர் என்ன சொல்ல விரும்புகிறாரோ, அதனை சுதந்திரமாக எடுத்து சொல்ல அனுமதிக்கப்படுகிறது. "நேர்காணல் என்பது காரண காரியத்துடன் கருத்துக்களை பரிமாறிக்கொள்ளும் ஒரு செயல்" என்று ஸ்காட் என்பவர் கூறுகிறார். நேர்காணலில் கேட்கப்படும் கேள்விகளுக்கு வந்தவர் எவ்வாறு பதில் அளிக்கிறார் என்று உற்று நோக்கப்படுகிறது. பணி நியமனத்துக்கு தயாராய் இருக்கும் பணியாளரிடம், அவரது கல்வி, அனுபவம், குடும்ப பின்னணி உள்பட பல்வேறு தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. மேலும் அவரது சுபாவம், தோற்றம், பேசும் திறன், இன்முகத்துடன் அடுத்தவரிடம் பழகும் விதம், அடுத்தவரிடம் தன்னை பற்றி ஒரு நல்ல எண்ணத்தை உருவாக்குதல் போன்றவை பற்றியும் மதிப்பீடு செய்வதற்கு நேர்காணல் உதவுகிறது.
விண்ணப்பதாரர் யார்?, அவர் எப்படி இருக்கிறார்?, அவர் எப்படிப்பட்டவர் என்பதை கண்கூடாக காணவும் நேர்காணல் பயன்படுகிறது. விண்ணப்பதாரரால் முடியும் என்னும் நம்பிக்கையை பெறுவதற்கான ஒரு சிறந்த சாதனமாகவும் நேர்காணல் அமைகிறது. நேர்காணல் நம்பத்தகுந்ததாகவும், செல்லத்தக்கதாகவும் அமைய வேண்டும். வேறு விதங்களில் முறைப்படுத்துதல் அல்லது மறைத்தல் போன்றவை தவிர்க்கப்பட்டு உண்மையை மட்டும் தரக்கூடியதாக அமைய வேண்டும். விண்ணப்பதாரர்களை அவர்களுடைய கருத்துக்களை வெளிப்படுத்த அனுமதிக்க வேண்டும்.
பணியாளர் முறைப்படி தேர்வு செய்யப்பட்டு, பணி நியமனம் செய்யப்பட்டவுடன் அவர்களுக்கு உரிய பயிற்சியும், வளர்ச்சி வாய்ப்பும் தரப்பட வேண்டும். பல பணியாளர்கள் எவ்வித முன் அனுபவமும் இன்றி நேரடியாக தேர்வு செய்யப்படுவதால் அவர்கள் பணியின்போது திணறுகிறார்கள். ஆகவே, அவர்களுக்கு உரிய பயற்சி அவசியம்.

No comments:

Post a Comment

Please Comment