Music school - ThulirKalvi Blogs

Latest

Search This Site

Music school

இசை பள்ளியில் விஜயதசமி வரை மாணவர்கள் சிறப்பு சேர்க்கை




காஞ்சிபுரம் அரசு இசைப்பள்ளியில், விஜயதசமி வரை சிறப்பு மாணவர் சேர்க்கை நடத்தப்படுவதாக, கலை பண்பாட்டுத் துறை தெரிவித்து உள்ளது.காஞ்சிபுரம் அருகே சதாவரம் பகுதியில், கலை பண்பாட்டுத் துறையின் கீழ் அரசு இசைப்பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளியில், தமிழகத்தின் பாரம்பரிய கலைகளான, குரலிசை, நாதஸ்வரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின் மற்றம் மிருதங்கம் போன்ற கலைப்பிரிவுகளில், மூன்றாண்டு பயிற்சி வழங்கப்படுகிறது. 






இப்பயிற்சிக்கான சேர்க்கை, ஜூலை மாதம் முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விஜயதசமி வரை, சிறப்புச் சேர்க்கைக்கு அனுமதிக்கப்படுவதாக, மண்டல உதவி இயக்குனர் குமார் தெரிவித்துள்ளார். இப்பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு, மாதந்தோறும், 400 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுவதாகவும், அரசின் வேலைவாய்ப்புக்கு முன்னுரிமை வழங்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Please Comment