Whatsapp - ThulirKalvi Blogs

Latest

Search This Site

Whatsapp

வாட்ஸ்ஆப்பில் டெலிட் செய்த மெசேஜ்களை படிக்கலாம்!

 

வாட்ஸ்ஆப்பில் நீங்கள் தவறி டெலிட் செய்த மெசேஜ்களை மீண்டும் படிக்கும் வசதியை பற்றி உங்களுக்கு தெரியுமா?

வாட்ஸ்ஆப்பில் அவசரத்தாலோ, நம்மை அறியாமலோ அழித்து விடும் மெசேஜ்களை படிக்கும் வசதியை வாட்ஸ்ஆப் கொடுக்கவில்லை. எனினும் அதனை படிக்க வேறு வழிகள் இருக்கின்றன.

முதலாவது மற்றொரு ஆப்பின் மூலம் இதனை செய்யலாம். அதற்கு, கூகுள் பிளே ஸ்டோரில் நோட்டிஃபிகேஷன் ஹிஸ்டரி என்ற ஆப்பை டவுன்லோட் செய்ய வேண்டும். பின் அதனை இன்ஸ்டால் செய்த பிறகு, அதில் வந்திருக்கும் வாட்ஸ்ஆப் நோட்டிஃபிகேஷன்களில் அழித்த மெசேஜ்களை பார்க்கலாம். ஆனால், இதில் குறுகிய காலத்திற்கு முன்பு வரை உள்ளவற்றை மட்டுமே பார்க்க முடியும்.

அடுத்து வாட்ஸ்ஆப் மூலமாகவும் இதனை செய்யலாம். பொதுவாக வாட்ஸ்ஆப்பில் பேக்அப் இரவுகளில் நடைபெறுகிறது. இதனால் உங்கள் வாட்ஸ்ஆப் சேட்கள் குகூள் டிரைவ்வில் சேமித்து வைக்கப்படும். எனவே நாம் வாட்ஸ்ஆப்பை மீண்டும் இன்ஸ்டால் செய்யும் போது, அழிக்கப்பட்ட மெசேஜ்களை மீண்டும் பெறலாம்.

அதற்கு உங்கள் வாட்ஸ்ஆப்பை டீ-ஆக்டிவேட் செய்துவிட்டோ, அல்லது டூயல் ஆப் முறையின் மூலமோ மீண்டும் இன்ஸ்டால் செய்யலாம்.

அப்போது ரீஸ்டோர் செய்வதன் மூலம் பழைய மெசேஜ்களை திரும்பப்பெறலாம். டூயல் ஆப் முறை சில மொபைல் போன்களில் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Please Comment