குரூப் 1 தேர்வு முடிவு டிசம்பரில் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி தகவல் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

குரூப் 1 தேர்வு முடிவு டிசம்பரில் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி தகவல்


குரூப் 1 தேர்வு முடிவு டிசம்பர் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம், தொகுதி-1ல் அடங்கிய பல்வேறு பதவிகளுக்கான முதல் நிலை தேர்வினை 2017 பிப்ரவரி 19ம்தேதி அன்று நடத்தி அதற்கான முடிவினை 2017 ஜூலை 21ம்தேதி அன்று வெளியிட்டு முதன்மை தேர்வினை 2017 அக்டோபர் 13, 14, 15ம் தேதிகளில் நடத்தியது. 







இதற்கான தேர்வு முடிவுகள் 2018 டிசம்பர் மாத இறுதிக்குள் வெளியிட உத்தேசிக்கப்பட்டு அது தொடர்பான விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.விடைத்தாள்கள் திருத்தும் பணி மிகவும் நேர்மையாகவும், பாதுகாப்பாகவும், ரகசியம் காப்பதில் மிகுந்த எச்சரிக்கையுடனும் நடைபெற்று வருவதால் தேர்வர்கள் இதுகுறித்து அவ்வப்போது வெளியாகும் தவறான, அவதூறான செய்திகள் குறித்து கவலைப்படத் தேவையில்லை. மேலும் ஏமாற்றுக்காரர்கள் மற்றும் இடைத்தரகர்களின் தவறான வாக்குறுதிகளை நம்பி ஏமாற வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment

Please Comment