மினி உலக கோப்பை கால்பந்து போட்டியில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு, நிதி உதவி அளிக்கப்பட்டது.
ஊட்டி அரசு கலைக்கல்லுாரி மாணவர்கள் இவின், ராகுல், அஜீத் ஆகியோர் மினி உலக கோப்பை கால்பந்து போட்டியில் பங்கு பெறும், இந்திய அணியில் விளையாட தேர்வாகியுள்ளனர். போட்டிக்கு சென்று வர அதிக செலவாகும் என்பதால், சிலர் தானாக முன்வந்து அவர்களுக்கு உதவி வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக, அ.தி.மு.க., மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வினோத் மூன்று மாணவர்களுக்கு தலா, 10 ஆயிரம் ரூபாய் வழங்கினார். இதற்கான நிகழ்ச்சியில், கல்லுாரி முதல்வர் ஈஸ்வரமூர்த்தி, தமிழ் பேராசிரியர் தர்மலிங்கம், உடற்கல்வி பேராசிரியர் ரவி உட்பட பலர் உடனிருந்தனர். .
No comments:
Post a Comment
Please Comment