அஞ்சலக ஆயுள் காப்பீடு: முகவர் பணிக்கு அக். 31 இல் நேர்காணல் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

அஞ்சலக ஆயுள் காப்பீடு: முகவர் பணிக்கு அக். 31 இல் நேர்காணல்


அஞ்சலக ஆயுள் காப்பீடு நேரடி விற்பனை முகவர்களை நியமிக்க அக்டோபர் 31-ஆம் தேதி நேர்காணல் நடைபெறும் என்று அஞ்சல்துறை தெரிவித்துள்ளது.



அஞ்சலக ஆயுள் காப்பீடு நேரடி விற்பனை முகவர்களை நியமிக்க நேர்காணல் சென்னை எழும்பூர் எத்திராஜ் சாலையில் உள்ள டிபிஏ வளாகத்தில் அக்டோபர் 31-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது. 



கல்வித் தகுதி: அஞ்சலக ஆயுள்காப்பீடு நேரடி விற்பனை காப்பீடு முகவர்களாக பணிபுரிய விரும்புவோருக்கான கல்வித் தகுதி, 5 ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் தொகை உள்ள பகுதியில் வசிப்போர் எனில் 10-ஆம் வகுப்பும், அதற்கு அதிகமான மக்கள்தொகை கொண்ட பகுதியில் வசிப்போர் எனில் 12-ஆம் வகுப்பும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். யார் பங்கேற்கலாம்: வேலையில்லாதவர்கள், சுயதொழில் புரியும் இளைஞர்கள், ஏதேனும் காப்பீடு ஆலோசகராகப் பணிபுரியும் முன் அனுபவம் உள்ளவர்கள், காப்பீடு விற்பனையில் முன் அனுபவம் உள்ளவர்கள், கணினி பயிற்சி பெற்றவர்கள், அங்கன்வாடி, மகிளா மண்டல பணியாளர்கள், சுயஉதவிக் குழுக்கள், முன்னாள் ராணுவத்தினர், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் உள்ளிட்டோர் (மற்ற காப்பீடு நிறுவனங்களில் தற்போது காப்பீடு முகவர்களாகப் பணிபுரிபவர்கள் தவிர) இந்த நேர்காணலில் கலந்து கொள்ளலாம். 



வயது வரம்பு: நேர்காணலில் 18 முதல் 60 வயது வரையிலானோர் பங்கேற்கலாம். இந்த நேர்காணலுக்கு எண் 3 மற்றும் 4, டிபிஏ வளாகம், எத்திராஜ் சாலை, எழும்பூர், சென்னை -8 என்ற முகவரியில் உள்ள முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், சென்னை வடகோட்டம் அலுவலகத்தில் அக்டோபர் 31 ஆம் தேதி காலை 10 மணிக்கு வரவேண்டும். இதில், கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் சுயவிவரம், வயது, கல்வித்தகுதி, அனுபவ சான்றிதழ்களுடன் நேரில் பங்கேற்கலாம் என அஞ்சல்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Please Comment