3ம் வகுப்பு மாணவியின் கின்னஸ் சாதனை முயற்சி: தலைமுடியில் கட்டி காரை இழுத்தார் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

3ம் வகுப்பு மாணவியின் கின்னஸ் சாதனை முயற்சி: தலைமுடியில் கட்டி காரை இழுத்தார்


பட்டுக்கோட்டை: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை- அறந்தாங்கி சாலை வெங்கடாசலம் நகரை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மகள் சம்யுக்தா (8). பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக கராத்தே பயிற்சி பெற்று வருகிறார். நேற்று பட்டுக்கோட்டை- அறந்தாங்கி மெயின் சாலை அலிவலத்தில் தன்னுடைய தலைமுடியால் 890 கிலோ எடை கொண்ட காரை 100 மீட்டர் தூரத்துக்கு 77 வினாடிகளில் இழுத்து சென்று கின்னஸ் சாதனைக்கு முயற்சி செய்துள்ளார். இது கின்னஸ் சாதனைக்கு பதிவு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.






மாணவி சம்யுக்தா கூறுகையில், சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு கராத்தே பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். அதில் ஒரு முயற்சியாக என் தலைமுடியால் காரை இழுத்து சாதனை செய்யலாம் என்று முடிவெடுத்து அதற்கான பயிற்சியை கடந்த 5 மாதங்களாக எடுத்து தற்போது இந்த கின்னஸ் சாதனை முயற்சி மேற்கொண்டுள்ளேன் என்றார்.

No comments:

Post a Comment

Please Comment