48 பள்ளிகளுக்கு தூய்மை பாரத விருது - ThulirKalvi Blogs

Latest

Search This Site

48 பள்ளிகளுக்கு தூய்மை பாரத விருது


ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 48 பள்ளிகளுக்கு தூய்மை பாரத விருதுகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.



மனித வள மேம்பாட்டு அமைச்சக வழிகாட்டுதலின்படி, தூய்மை பாரதம், தூய்மையான பள்ளி திட்டத்தின்கீழ், ஈரோடு மாவட்டத்தில் உள்ள 48 பள்ளிகளுக்கு தூய்மை பாரத விருதும், தலா ரூ. 5,000 காசோலை பரிசும் வழங்கப்பட்டது.



பள்ளிகளில் சுத்தமான குடிநீர் வழங்குதல், சுகாதாரமான முறையில் கழிப்பறை பராமரிப்பு, சுற்றுப்புறத் தூய்மை, சுத்தமாக கை கழுவி சுகாதாரமாக இருக்கும் குழந்தைகள், பள்ளிக்கு வெளியே சுற்றுப்புற தூய்மையை கடைப்பிடிக்கும் பள்ளிகளைத் தேர்வு செய்து இவ்விருது வழங்கப்பட்டது.



இதற்காக அந்தந்தப் பள்ளி நிர்வாகிகள் ஆன்லைன் மூலம் தங்கள் பள்ளியின் செயல்பாடுகளைப் பதிவு செய்தனர். அதில், சிறப்பாக செயல்பட்டதாக கண்டறியப்பட்ட 48 பள்ளிகளுக்கு இவ்விருது வழங்கப்பட்டது. தவிர, 5 ஆவது வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கான ஓவியப் போட்டியும், 6 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவிகளுக்கு கட்டுரைப் போட்டியும் நடத்தப்பட்டதில் தேர்வான 9 மாணவர்களுக்கு சான்றிதழும், ரூ. 500 மதிப்புடைய புத்தகங்களையும் ஆட்சியர் சி.கதிரவன் வழங்கினார். முதன்மைக் கல்வி அலுவலர் ரெ.பாலமுரளி உடனிருந்தார்.

No comments:

Post a Comment

Please Comment