சரியாக 6 மணி நேரம் தூங்கினால் ரூ.42,000 ஊக்கப்பரிசு.! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

சரியாக 6 மணி நேரம் தூங்கினால் ரூ.42,000 ஊக்கப்பரிசு.!

வாரத்திற்கு 5 நாட்கள் இரவில் குறைந்தது 6 மணி நேரம் தூங்கினால் ரூ.42 ஆயிரம் வரை ஊக்கப்பரிசு வழங்கப்படும் என ஜப்பானைச் சேர்ந்த நிறுவனம் விநோத அறிவிப்பை வெளியிட்டுள்ளது.




ஜப்பானைச் சேர்ந்த திருமணங்களை நடத்தி வைக்கும் கிரேசி இண்டெர்நேஷ்னல் என்ற நிறுவனம் தனது ஊழியர்களுக்கு ஊக்கப்பரிசு ஒன்றை அறிவித்துள்ளது. அந்த பரிசை பெற வேண்டுமென்றால் வாரத்திற்கு 5 நாட்கள் இரவில் 6 மணி நேரம் முழுமையாக தூங்க வேண்டும் என்பது நிபந்தனை.



இதற்கான பிரத்யேகமான செயலி தூங்கும் நேரத்தைக் கணக்கிடும். 6 மணி நேரத்தை சரியாக பூர்த்தி செய்யும் ஊழியர்களுக்கு புள்ளிகள் வழங்கப்படும். இந்தப் புள்ளிகளின் அடிப்படையில் அந்த நிறுவனத்தின் உணவகத்தில் ஆண்டுக்கு 42,000 ரூபாய் வரை (இந்திய மதிப்பில்) சாப்பிட்டுக் கொள்ளலாம் அல்லது பணமாகவே வாங்கிக் கொள்ளலாம் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





" ஆண்கள், பெண்கள் என 20 வயதுக்குட்பட்ட இளைஞர்களில் 92% பேர் இரவு சரியாக தூங்குவதில்லை. சரியாக தூங்காத ஊழியர்களால் அலுவலக வேலைகள் பாதிக்கின்றன. தூக்கத்தின் தேவையை உணர்த்த இப்படிச் செய்கிறோம் " என அந்த நிறுவனத்தின் அதிகாரி கூறியிருக்கிறார்.

No comments:

Post a Comment

Please Comment